80 வயதிலும் முடி கரு கருன்னு இருக்க.. சிம்பிள் ஹேர் டை தயாரிக்கும் முறை!

0
143
#image_title

80 வயதிலும் முடி கரு கருன்னு இருக்க.. சிம்பிள் ஹேர் டை தயாரிக்கும் முறை!

தலை முடி கருமையாக இருக்கும் வரை தான் இளமை பருவம் இருக்கும். முடி நரைத்து விட்டால் வயதான தோற்றத்தை கொடுத்து விடும்.

இந்த வெள்ளை நரை பிரச்சனை காலம் காலமாக இருக்கின்ற ஒன்று தான். ஆனால் நரைமுடி வந்து விட்டால் அதை மறைக்க கண்ட ஹேர் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இயற்கையான பொருட்களை கொண்டு ஹேர் டை தயார் செய்து பயன்படுத்துவதை வழக்கமாக்கி கொண்டால் பாதிப்பு இல்லாமல் நரையை கருமையாக்கி கொள்ளலாம்.

*கற்பூரவல்லி
*கற்றாழை
*வெந்தயப் பொடி
*நெல்லிக்காய் பொடி

ஹேர் டை…

முதலில் ஒரு கைப்படி அளவு கற்பூரவல்லி இலை மற்றும் 1 கற்றாழை மடலை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் ஒரு இரும்பு கடாயை அடுப்பில் வைக்கவும். அதில் 1 ஸ்பூன் வெந்தயப் பொடி மற்றும் 1 ஸ்பூன் நெல்லிக்காய் பொடி சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.

இந்த பொடிகளை வறுத்த பின்னர் அதில் அரைத்த கற்பூரவல்லி + கற்றாழை சாற்றை ஊற்றி கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த கலவையை ஆறவிட்டு பார்த்தால் அடர் கருமை நிறத்தில் இருக்கும். இந்த ஹேர் டையை தலையில் தடவி 1 மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும்.

இவ்வாறு 7 நாட்களுக்கு ஒருமுறை செய்து வர வெள்ளை முடி கருமையாக மாறும்.