நாட்டில் நோய் தொற்று பலி எண்ணிக்கை 72 ஆக அதிகரிப்பு!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 9,062 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பலியானோரின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்திருக்கிறது, இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 12,608 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 4,42,98,864 என அதிகரித்திருக்கிறது.

இந்த நோய் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 4,36,54,064 என இருந்து வருகிறது. இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 72 பேர் பலியானதால் பலி எண்ணிக்கை 5,27,206 என அதிகரித்திருக்கிறது.

தற்போது இந்த நோய் தொற்று காரணமாக, சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1,01,343 என இருந்து வருகிறது. இதுவரையில் 208.95 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தன்னுடைய அறிக்கையின் மூலமாக தெரிவித்திருக்கிறது.