கோவை மாவட்டத்தில் பேருந்து சிறை பிடித்த ஊர் பொதுமக்கள்! பள்ளி மாணவர்கள் அவதி!

Photo of author

By Parthipan K

கோவை மாவட்டத்தில் பேருந்து சிறை பிடித்த ஊர் பொதுமக்கள்! பள்ளி மாணவர்கள் அவதி!

Parthipan K

Updated on:

the-people-of-the-bus-jail-in-coimbatore-district-school-students-suffer

கோவை மாவட்டத்தில் பேருந்து சிறை பிடித்த ஊர் பொதுமக்கள்! பள்ளி மாணவர்கள் அவதி!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த தென்னமநல்லூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் பிள்ளைகள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் மற்றும் வியாபாரத்திற்கு செல்லும் வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கு காரணம் அந்தப் பகுதியில் நீண்ட நாட்களாக சரியான நேரத்தில் பேருந்து இயக்கப்படுவதில்லை என பொதுமக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் அழைத்து வந்துள்ளனர். அதனை கண்டு கொள்ளாத மாவட்ட நிர்வாகத்திடம் மீண்டும் சென்று கேட்டு எந்த பயனும் இல்லை என்று கருதி தென்னமநல்லூருக்கு பொதுமக்கள் இன்று அந்த பகுதிக்கு வந்த அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை  மறியலில் ஈடுபட்டனர்.

ஊர் பொதுமக்கள் கொட்டும் மழையையும்  பொருட்படுத்தாமல் பேருந்தை சிறைபிடித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் வந்து சரியான நேரத்தில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை  எடுப்பதாக உறுதி அளித்தால் மட்டுமே இந்த கூட்டம் கலைந்து செல்லும் எனவும் கூறி தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் அந்த நேரத்தில் பள்ளி பேருந்துகள்  மற்றும் வேலைக்கு செல்பவர்கள் என பலரும் பாதிப்படைந்தனர். இதனையடுத்து  தொண்டாமுத்தூர் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர். அதனை ஏற்றுக் கொண்ட ஊர் பொதுமக்கள் அங்கிருந்து கலந்து சென்றனர். இந்த சாலை மறியலினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவி காணப்பட்டது.