டிசம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவடையும்

Photo of author

By Parthipan K

உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமேரிக்காவும், பிரேசிலும் கொரோனா வைரஸிடம் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது. தற்போது இந்தியாவிலும் அதிதீவிரமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த மருத்துவத்துறையினர் தீவிரமாக போராடி வருகின்றனர். இதற்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் ஒரு சில நிறுவனங்களின் மருந்துகள், இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளன. அஸ்ட்ரா செனேக்கா என்ற பிரிட்டனை சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனமான மெக்சிகோ மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளிடம் தடுப்பூசி தயாரிப்பதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிலையில் அஸ்ட்ரா செனேக்கா நிறுவனத்தின் தலைவர் டிசம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவடையும் என்று கூறினார்.