எங்கள் ஆட்சியை திருடிவிட்டார்கள்! மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தி விமர்சனம்!!
மத்திய பிரதேசத்தில் எங்கள் ஆட்சியை அவர்கள்(பாஜக) திருடினார்கள் என்றும், மத்திய அரசான பாஜக கொண்டுவந்த ஜிஎஸ்டி என்று அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி என்பது வரி அல்ல. அது சிறு குறு தொழில்களை அழிக்கக்கூடிய ஆயுதம் என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் விமர்சனம் செய்துள்ளார்.
மத்திய பியதேச மாநிலத்தில் வரும் நவம்பர் 17ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளுக்கும் பரபரப்பாக பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பாக மத்திய பிரதேசம் மாநிலம் சாட்னா நகரில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் பிரச்சாரம் செய்தார்.
அந்த பிரச்சாரத்தில் ராகுல் காந்தி அவர்கள் “மிகப் பெரிய நிறுவனங்கள் கூட அதிக அளவிலான வேலை வாய்ப்புகளை வழங்குவது கிடையாது. தற்போதைய நிலையில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தான் அதிக அளவிலான வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றது.
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் சிறிய அளவிலான பொருட்களை தயாரிப்பவர்களாக இருக்கின்றார்கள். கடைகளை நடத்தி வருகின்றார்கள். இது போன்ற லட்சக்கணக்கான எண்ணிக்கையில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில் மட்டும் பல லட்சக்கணக்கான மக்கள் வேலை செய்து வருகின்றனர்.
உண்மையில் நம் நாட்டில் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் நிறுவனங்கள் இந்த சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பாஜக ஆட்சியில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பாதிப்படைய வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் பாஜக அரசு ஜிஎஸ்டி போன்றவற்றை கொண்டு வந்தார்கள். ஜிஎஸ்டி என்பது வரி இல்லை. அது ஒரு ஆயுதம். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை அழிக்கக் கொண்டு வந்த ஆயுதம்.
காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்யும் பொழுது மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வராக கமல்நாத் அவர்கள் இருந்தார். அப்போதைய முதல்வர் கமல்நாத் அவர்கள் தலைமையிலான அரசு தற்பொழுது மிகப் பெரிய தொழிலதிபரான அதானி அவர்களுக்கு ஆதரவாக எதுவும் செய்யவில்லை.
மாற்றாக காங்கிரஸ் தலைமையிலான மத்திய பிரதேச அரசு அன்று விவசாயிகள், சிறிய கடையை வைத்து வியாபாரம் செய்வோர், கூலித் தொழிலாளிகள் ஆகியோருக்கு ஆதரவாக செயல்பட்டது. இதுதான் பாஜக தற்பொழுது மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க காரணமாக அமைந்தது.
ஏழைகளுக்கு ஆதரவாக செயல்பட்ட காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்ற கோடீஸ்வரர்கள், தொழிலதிபர்கள் அனைரும் பிரதமர் முடி மற்றும் தற்போதைய பாஜக முதல்வர் சிவராஜ்சிங் சவுஹான் ஆகியோருடன் இணைந்தது. காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து பாஜக கட்சி மத்திய பிரதேசம் மாநிலத்தின் ஆட்சியை திருடினார்கள் என்று தான் கூற வேண்டும்” என்று அவர் பேசினார்.