வந்தாச்சு 2024 ஆம் ஆண்டின் அரசு பொது விடுமுறை பட்டியல்!! பள்ளி மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி தான்!!

0
147
#image_title

வந்தாச்சு 2024 ஆம் ஆண்டின் அரசு பொது விடுமுறை பட்டியல்!! பள்ளி மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி தான்!!

ஒவ்வொரு வருடமும் அரசு பொது விடுமுறை பட்டியலை தமிழக அரசு வெளிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் வருகின்ற 2024 ஆம் ஆண்டிற்கான அரசு பொது விடுமுறை பட்டியலை தற்பொழுது தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது.

நடப்பாண்டில் அரசு விடுமுறை நாட்கள் பெரும்பாலும் சனி, ஞாயிறு என்று இருந்ததால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். மாணவச் செல்வங்கள் மட்டும் இன்றி வேலைக்கு செல்பவர்களும் 2023 ஆம் ஆண்டு அரசு விடுமுறையால் ஏமாற்றம் அடைந்தனர் என்றே சொலலலாம்.

இந்த 2023 ஆம் ஆண்டு நிறைவு பெற இன்னும் 1 மாதம் மட்டுமே பாக்கி இருக்கிறது. அடுத்த 2024 ஆம் ஆண்டை வரவேற்க அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம். சிலர் புது வருடம், பொங்கல் உள்ளிட்ட பண்டிகை தினங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். சிலர் 2024 ஆம் ஆண்டில் ஒவ்வொரு மாதத்திலும் எத்தனை அரசு விடுமுறை இருக்கிறது என்று பார்க்க ஆவலுடம் காத்து கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் வருகின்ற 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 24 நாட்கள் அரசு பொது விடுமுறை தினங்களாக தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.

இதில் ஆங்கில புத்தாண்டு, பொங்கல், வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு, பக்ரீத், கிருஷ்ண ஜெயந்தி, மிலாடி நபி உள்ளிட்டவைகள் திங்கட் கிழமை அன்று வருகிறது.

அடுத்து திருவள்ளுவர் தினம், தெலுங்கு வருடப் பிறப்பு உள்ளிட்டவைகள் செவ்வாய் கிழமை அன்று வருகிறது.

உழவர் திருநாள், மே தினம், மொஹரம், காந்தி ஜெயந்தி, கிறிஸ்துமஸ் உள்ளிட்டவைகள் புதன் கிழமை அன்று வருகிறது.

தைப்பூசம், ரம்ஜான், சுதந்திர தினம், தீபாவளி உள்ளிட்டவைகள் வியாழக் கிழமை அன்று வருகிறது.

புனித வெள்ளி, ஆயுத பூஜை உள்ளிட்டவைகள் வெள்ளிக்கிழமை அன்று வருகிறது.

விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி உள்ளிட்டவைகள் சனிக்கிழமை அன்று வருகிறது.

இதன்படி 24 அரசு விடுமுறை நாட்களில் 2 விடுமுறை தினம் ஞாயிற்று கிழமைகளிலும், திங்கள் தினத்தில் 5 விடுமுறை, செவ்வாய் தினத்தில் 2 விடுமுறை, புதனில் 5 விடுமுறை, வியாழனில் 4 விடுமுறை, வெள்ளியில் 2 விடுமுறை மற்றும் 2 விடுமுறை சனிக்கிழமை அன்று வருகிறது.