சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த எடப்பாடியார்!! முடிவுக்கு வருமா இருக்கை விவகாரம்?

0
31
#image_title

சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த எடப்பாடியார்!! முடிவுக்கு வருமா இருக்கை விவகாரம்?

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 11 அன்று அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் சிறப்புத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவரது ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட 4 பேரை அதிமுகவில் இருந்து நீக்கி அக்கட்சி தலைமை அதிரடி காட்டியது.

மேலும் எதிர்க்கட்சி துணை தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரையும், கட்சியின் துணைச் செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தியையும் கட்சி தலைமை நியமனம் செய்தது.

இந்நிலையில் சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவருக்கு அருகில் உள்ள இருக்கையில் தான் எதிர்க்கட்சி துணைத் தலைவர்கள் அமர வேண்டும். இது தான் மரபு.

ஆனால் எதிர்க்கட்சி துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கு உரிய இருக்கை வழங்கப்படவில்லை. இதுகுறித்து சபாநாயகர் அப்பாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பலமுறை கடிதங்கள் அனுப்பியும் இது குறித்து அவர் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை என்று சொல்லப்படுகிறது.

இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக எடப்பாடியார் வழக்கு ஒன்றை தொடுத்தார். இந்த வழக்கானது இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

எடப்பாடியார் தொடுத்த வழக்கின் மனுவில் சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கான முறையான இருக்கை கொடுக்கப்பட வில்லை. இதுகுறித்து சபாநாயகருக்கு பலமுறை கடிதங்கள் அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அவர் ஒருதலை பட்சமாக செயல்படுகிறார்.

எனவே நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரித்து, சட்டசபையில் அவருக்கு உரிய இருக்கையை ஒதுக்க சபாநாயகருக்கும், சட்டமன்ற செயலாளருக்கும் உத்தரவிட வேண்டுமென்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதை விசாரித்த நீதிபதி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொடுத்த மனுவிற்கு சபாநாயகர் மற்றும் சட்டமன்ற செயலாளர் வருகின்ற டிசம்பர் மாதம் 12 ஆம் த்திக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை அடுத்த மாதம் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.