PCOS மற்றும் PCOD பாதிப்புக்கு சிறந்த தீர்வு இந்த கசாயம்!

Photo of author

By Divya

PCOS மற்றும் PCOD பாதிப்புக்கு சிறந்த தீர்வு இந்த கசாயம்!

இன்றைய நவீன உலகில் மோசமான வாழ்க்கைமுறை, உணவுமுறை பழக்கத்தால் பெண்கள் பலர் PCOS மற்றும் PCOD பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றனர்.

PCOS மற்றும் PCOD பிரச்சினையால் முறையற்ற மாதவிடாய், மாதவிடாய் சமயத்தில் கடுமையான பிடிப்புகள், வலி மற்றும் கருத்தரிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

PCOS பிரச்சனை உள்ள பெண்கள் அஸ்வகந்தா மற்றும் இலவங்கப்பட்டையை பொடி செய்து கஷாயம் அருந்தி வரலாம். இதனால் உரியத் தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

*அஸ்வகந்தா தூள் – 1/2 தேக்கரண்டி

*இலவங்கப்பட்டை(கிராம்பு) தூள் – 1/2 தேக்கரண்டி

*தண்ணீர் – 1டம்ளர்

செய்முறை…

முதலில் கிண்ணத்தில் 1/2 தேக்கரண்டி அஸ்வகந்தா தூள், 1/2 தேக்கரண்டி இலவங்கப்பட்டை(கிராம்பு) தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும். தண்ணீர் சூடானதும் கலக்கி வைத்துள்ள அஸ்வகந்தா மற்றும் இலவங்கப்பட்டை தூளை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.

பின்னர் அடுப்பை அணைத்து 2 நிமிடங்களுக்கு பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி பருகவும்.

காலை நேரத்தில் பருகுவதன் மூலம் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். இந்த கசாயம் PCOS மற்றும் PCOD பிரச்சினையை சரி செய்ய உதவுகிறது.