இந்த கை வைத்தியம் உங்களுடைய மருத்துவ செலவுகளை கட்டாயம் குறைத்து விடும்!!

Photo of author

By Divya

இந்த கை வைத்தியம் உங்களுடைய மருத்துவ செலவுகளை கட்டாயம் குறைத்து விடும்!!

*சளி பாதிப்பு

வெற்றிலை,துளசி,ஓமவல்லி இலை சம அளவு எடுத்து அரைத்து சாறு பிழிந்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் சளி பாதிப்பு முழுமையாக அகலும்.

*காயம்,இரத்த கட்டு

திரிபலா சூரணத்தை சிறிதளவு சூடான நீரில் போட்டு குழைத்து உங்கள் உடலில் காயம்,இரத்த கட்டு ஏற்பட்ட இடத்தில் தடவினால் அவை விரைவில் குணமாகும்.

*இருமல்

அடிக்கடி இருமல் வந்தால் அதை குணமாக்க தாளிசாதி சூரணத்தை தேனில் கலந்து சாப்பிட வேண்டும்.

*தலைவலி

ஒரு ஸ்பூன் கொத்தமல்லி விதையை ஒரு கிளாஸ் அளவு நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும்.

*தீ புண்

கற்றாழை ஜெல்லை தீ புண் மீது தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

*வியர்க்குரு

வேப்பிலை மஞ்சள் மஞ்சளை அரைத்து விழுதாக்கி உடலில் பூசி குளிக்க வேண்டும்.

*எலும்பு வலிமை

கருப்பு உளுந்தை ஊறவைத்து அரைத்து நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட வேண்டும்.

*வெள்ளைப்படுதல்

கீழா நெல்லியை அரைத்து நீரில் போட்டு காய்ச்சி குடித்தால் தீர்வு கிடைக்கும்.

*உடல் உஷ்ணம்

இரவு தூங்குவதற்கு முன் தொப்புளில் சில துளிகள் விளக்கெண்ணெய் விட்டு மசாஜ் செய்யவும்.

*காய்ச்சல்

அரிசியை வறுத்து அரைத்து கஞ்சி செய்து குடிக்க வேண்டும்.