பூரான் கடிக்கு சிறந்த வீட்டு வைத்தியம் இது தான்!! 100% பலன் கொடுக்கும்!!

0
474
#image_title

பூரான் கடிக்கு சிறந்த வீட்டு வைத்தியம் இது தான்!! 100% பலன் கொடுக்கும்!!

பார்க்கவே பயத்தையும், அருவருப்பையும் ஏற்படுத்தும் ஊர்வனவைகளில் ஒன்று பூரான். இந்த பூரான் ஒருவரை கடித்தால் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தது என்றாலும் கடித்த சிறிது நேரத்தில் தடுப்பு, உடல் உபாதை ஏற்படத் தொடங்கிவிடும். பூரான் ஒருவரை கடித்து விட்டால் அதை சரி செய்ய வீட்டு வைத்திய முறையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

தீர்வு 1:

தேவையான பொருட்கள்:-

*கரு மிளகு – 5

*வெற்றிலை – 1

செய்முறை:-

ஒரு மிக்ஸி ஜாரில் காம்பு நீக்கிய வெற்றிலை ஒன்று மற்றும் 5 கருப்பு மிளகு சேர்த்து ஒரு சுத்து விடவும். பின்னர் அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.

இந்த விழுதை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து விழுங்க வேண்டும். பூரான் கடித்த நபர் இந்த முறையை கடைபிடித்தால் பூரான் விஷம் முழுவதும் முறிந்து விடும்.

தீர்வு 2:

தேவையான பொருட்கள்:-

*குப்பைமேனி இலை – 1 கைப்பிடி அளவு

*மஞ்சள் தூள் – சிறிதளவு

செய்முறை:-

முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் 1 கைப்பிடி அளவு குப்பைமேனி இலை சேர்த்து நன்கு அலசிக் கொள்ளவும்.

பின்னர் இதை ஒரு உரலுக்கு மாற்றிக் கொள்ளவும். அடுத்து சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு இடித்துக் கொள்ளவும். இந்த குப்பை மேனி + மஞ்சள் கலவையை பூரான் கடித்த இடத்தில் வைப்பதன் மூலம் விஷம் முறியத் தொடங்கும். அதேபோல் வெறும் மஞ்சளில் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் குழப்பி பூரான் கடித்த இடத்தில் வைத்தாலும் பூரான் விஷம் முறியும்.