ஆறு மாதம் முதல் ஒரு வயது குழந்தைக்கு கொடுக்க வேண்டிய சத்து மாவு இது..!

Photo of author

By Divya

ஆறு மாதம் முதல் ஒரு வயது குழந்தைக்கு கொடுக்க வேண்டிய சத்து மாவு இது..!

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளி கொடுக்கும் சத்துமாவு பவுடர் தயாரிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)பாசிப்யாறு
2)கோதுமை
3)ராகி
4)கம்பு
5)முந்திரி
6)ஏலக்காய்
7)வேர்க்கடலை
8)ஜவ்வரிசி
9)மக்காச்சோளம்
10)பொட்டுக்கடலை

ஒரு வெள்ளை காட்டன் துணியில் 10 கிராம் பாசிப்பயறு, 10 கிராம் கோதுமை, 10 கிராம் ராகி, 10 கிராம் கம்பு, 10 கிராம் முந்திரி, 10 கிராம் ஜவ்வரிசி, 10 கிராம் மக்காச்சோளம், 10 கிராம் பொட்டுக்கடலை, 10 கிராம் வேர்க்கடலை மற்றும் 10 கிராம் ஜவ்வரிசி போட்டு வெயில் படும்படி நன்கு காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு நாள் வரை காய வைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் காய வைத்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து மிதமான தீயில் லேசாக வறுத்துக் கொள்ளவும்.

இதை ஒரு தட்டில் கொட்டி நன்கு ஆற விடவும். பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு 1 ஏலக்காய் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

இந்த பவுடரை ஆறவிட்டு ஒரு பாட்டிலில் சலித்து வைத்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை..

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1/4 கிளாஸ் தண்ணீர் மற்றும் 1/4 கிளாஸ் பால் சேர்க்கவும். பிறகு அதில் 1 ஸ்பூன் சத்துமாவு பொடி சேர்த்து நன்கு கிண்டி விடவும். மாவு பாலில் கலந்து கஞ்சி பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

இதை ஆறவிட்டு குழந்தைகளுக்கு ஊட்டவும். இவ்வாறு தினமும் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.. உடல் ஆரோக்கியம் மேம்படும்.