இந்த கஞ்சி ஆண்மையை 1000 மடங்கு அதிகரிக்கும்!

Photo of author

By Divya

இந்த கஞ்சி ஆண்மையை 1000 மடங்கு அதிகரிக்கும்!

உணவுமுறை, வாழ்க்கைமுறை மாற்றம், தவறான பழக்கவழக்கம் உள்ளிட்ட காரணங்களால் ஆண்மை குறைபாடு ஏற்படுகிறது. இதனால் நரம்பு தளர்ச்சி, கை கால் நடுக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. இதை குணமாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றவும்.

தேவைப்படும் பொருட்கள்…

*பூமி சக்கரை கிழங்கு – 100 கிராம்
*நிலப் பனைக் கிழங்கு – 100 கிராம்
*சீமை அமுக்ரா கிழங்கு – 100 கிராம்
*பூனைக்காலி – 100 கிராம்
*பசும்பால் – 1 கப்
*அரச விதை – 100 கிராம்
*வெள்ளை முசிலி – 100 கிராம்
*சால முசிலி – 100 கிராம்
*நாயுருவி அரிசி – 100 கிராம்
*முருங்கை விதை – 100 கிராம்
*நெருஞ்சில் முள் – 100 கிராம்
*அக்ரகாரம் – 50 கிராம்
*மூங்கில் அரிசி – 1 கிலோ

செய்முறை…

அடுப்பில் ஒரு இட்லி பாத்திரம் வைத்து அதில் 1 கப் பால் மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பிறகு இட்லி பாத்திரத்தில் ஒரு இட்லி தட்டு வைத்து அதன் மேல் பூமி சக்கரை கிழங்கு, நிலப் பனைக் கிழங்கு, சீமை அமுக்ரா கிழங்கு, தோல் நீக்கிய பூனைக்காலி ஆகியவற்றை வைத்து 15 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வேக விட்டு வெயிலில் காயவைத்து கொள்ளவும்.

பிறகு மிக்ஸி ஜாரில் காயவைத்த பொருட்களை சேர்த்துக் கொள்ளவும். பிறகு அதில் அரச விதை, வெள்ளை முசிலி, சால முசிலி, நாயுருவி அரிசி, முருங்கை விதை, நெருஞ்சில் முள், அக்ரகாரம் மூங்கில் அரிசி ஆகியவற்றை சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.

இந்த பொடியை ஆறவிட்டு ஒரு டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி 4 ஸ்பூன் அளவு தயார் செய்து வைத்துள்ள பொடியை சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 100 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பிறகு கரைத்து வைத்துள்ள கலவையை அதில் ஊற்றி மிதமான தீயில் நன்கு காய்ச்சிக் கொள்ளவும்.
பிறகு இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி பருகவும். இவ்வாறு தினமும் குடித்து வந்தால் ஆண்மை குறைபாடு, மலட்டு தன்மை, நரம்பு தளர்ச்சி உள்ளிட்ட பிரச்சனைகள் குணமாகும்.