பல நோய்களை அசால்ட்டாக குணமாக்கும் அதிசிய வேர்.. இது!

Photo of author

By Divya

பல நோய்களை அசால்ட்டாக குணமாக்கும் அதிசிய வேர்.. இது!

மாறி வரும் வாழ்க்கை சூழலால் மனிதர்களின் உடலில் எண்ணற்ற நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. முந்தைய காலத்தில் இல்லாத அளவிற்கு நோய் பெருக்கம் அதிகமாகி இருக்கின்றது. இதற்கு முக்கிய காரணம் உணவு பழக்கம்… உணவில் டேஸ்ட் இருக்க வேண்டும் என்று நினைக்கும் நாம் அதில் சத்துக்கள் இருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை.

சத்தான உணவு சுவையை தராது… இதனால் சத்தான உணவை ஒதுக்கிவிட்டு எந்த ஒரு ஊட்டச்சத்தும் இல்லாத உடலுக்கு கேடு தரும் உணவை காசு கொடுத்து வாங்கி உண்டு வருகிறோம்.

இதனால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க சித்தர்கள் அதிகம் பயன்படுத்திய மூலிகை வேரான வெட்டி வேரை பயன்படுத்தவும்.

இதன் பெயர் மட்டும் தான் வெட்டி.. ஆனால் இவை செய்யும் வேலைகள் ஆயிரம்…

வெட்டி வேர் பயன்படுத்தும் முறை…

வெட்டி வேரை நீரில் ஊறவைத்து அந்த நீரை குடித்து வந்தால் உடல் சூடு குறையும்.

மூட்டு வலி இருப்பவர்கள் வெட்டி வேரை நல்லெண்ணெயில் போட்டு ஊறவைத்து.. மூட்டுகளில் தேய்த்து வந்தால் அவை முழுமையாக குணமாகும்.

வெட்டி வேரில் கசாயம் செய்து குடித்து வந்தால் உடல் சோர்வு நீங்கும். உடலுக்கு போதிய எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

வெட்டி வேரை பொடி மற்றும் கருஞ்சீரகப் பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் வயிற்று வலி முழுமையாக குணமாகும்.

வெட்டி வேர் பொடி மற்றும் கடுக்காய் பொடி சம அளவு எடுத்து தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசி வந்தால் முகப்பருக்கள் முழுமையாக குணமாகும்.