சுகர் லெவல் குறைய இந்த இயற்கை வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!

Photo of author

By Divya

சுகர் லெவல் குறைய இந்த இயற்கை வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!

Divya

சுகர் லெவல் குறைய இந்த இயற்கை வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!

1)நித்தியகல்யாணி பூவை உலர்த்தி பொடியாக்கி நீரில் சேர்த்து காய்ச்சி அருந்தி வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

2)ஆவாரம்பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி நீரில் சேர்த்து காய்ச்சி அருந்தி வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

3)செம்பருத்தி பூ இதழை 1 கிளாஸ் அளவு நீரில் போட்டு காய்ச்சி அருந்தி வர சர்க்கரை அளவு குறையும்.

4)கற்றாழை சாற்றில் சிறிது எலுமிச்சை பழச் சாறு கலந்து அருந்தி வந்தால் இரத்த சர்க்கரை அளவு குறையும்.

5)வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி சுடுநீரில் கலந்து அருந்தி வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

6)மாம்பூவில் கசாயம் செய்து அருந்தினால் சர்க்கரை நோய் குணமாகும்.

7)கோவைக்காயை உலர்த்தி பொடியாக்கி வெந்நீரில் கலந்து அருந்தி வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.

8)பெரு நெல்லிக்காயை விதை நீக்கி உலர்த்தி பொடியாக்கி சாப்பிட்டு வர சர்க்கரை நோய் குணமாகும்.

9)பன்னீர் ரோஜா இதழை உலர்த்தி பொடியாக்கி காலை நேரத்தில் 1 ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை பாதிப்பு நீங்கும்.

10)நாவல் விதையை அரைத்து சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு குறையும்.