மலைக்க வைக்கும் வேப்பம் பூவின் மருத்துவ பயன்கள்!

0
257
#image_title

மலைக்க வைக்கும் வேப்பம் பூவின் மருத்துவ பயன்கள்!

வேப்ப மரத்தில் உள்ள அனைத்து பொருட்களும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை ஆகும். உடலில் தலை முதல் பாதம் வரை அனைத்தை வித நோய் பாதிப்புகளை குணமாக்கும் தன்மை வேப்பமரத்தில் உள்ள இலை, பூ, விதை, பட்டை உள்ளிட்டவைகளுக்கு உண்டு.

இதில் வேப்பம்பூவில் அடங்கி இருக்கும் மருத்துவ குணங்கள் குறித்த தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

வேப்பம்பூவை உலர்த்தி பொடியாக்கி காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் செரிமானக் கோளாறு நீங்கும்.

அடிக்கடி வாந்தி உணர்வு ஏற்பட்டால் வேப்பம்பூவை அரைத்து துவையல் செய்து சாப்பிட்டு வரலாம். இதன் மூலம் உரியத் தீர்வு கிடைக்கும்.

வேப்பம்பூவை நீரில் கொதிக்க வைத்து அருந்தினால் பித்தம் குறையும்.

அதேபோல் வேப்பம்பூவை நீரில் சேர்த்து கொதிக்க வைத்து ஆவி பிடித்து வந்தால் தலைவலி, தலைபாரம், சைனஸ், சளி உள்ளிட்ட பிரச்சனைகள் அகலும்.

வேப்பம்பூவை அரைத்து உடலில் பூசி குளித்து வந்தால் தோல் அலர்ஜி நீங்கும்.

வேப்பம்பூவை உலர்த்தி பொடியாக்கி முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் முகம் மிருதுவாக இருக்கும். பருக்கள் பாதிப்பு சரியாகும்.

வேப்பம்பூவில் கசாயம் செய்து குடித்து வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.