முடி காடு மாதிரி அடர்த்தியாக வளர இதை ட்ரை பண்ணுங்க!! நல்ல ரிசல்ட் கிடைக்கும்!!

0
43
#image_title

முடி காடு மாதிரி அடர்த்தியாக வளர இதை ட்ரை பண்ணுங்க!! நல்ல ரிசல்ட் கிடைக்கும்!!

குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரையும் பாதிக்க கூடியத பிரச்சனையாக பொடுகு இருக்கிறது.இந்த பிரச்சனையை கண்டு கொள்ளாமல் விட்டோம் என்றால் முடி உதிர்வு,தலையில் அரிப்பு,வழுக்கை,தோல் வியாதிகள் உள்ளிட்டவை நிகழ தொடங்கும்.முடி அதிகளவில் உதிர காரணமாக இருக்கும் பொடுகு பிரச்சனையானது வறண்ட சருமம்,மன அழுத்தம்,முறையற்ற உணவு பழக்கம் போன்றவைகளால் ஏற்படுகிறது.இந்த பொடுகு பிரச்சனையை அதிக மருத்துவம் கொண்ட பச்சை பயறு மற்றும் தயிரை வைத்து ஒரே மாதத்தில் சரி செய்து விடலாம்.

தேவையான பொருட்கள்:-

பச்சை பயறு – 3 ஸ்பூன்

தயிர் – 4 ஸ்பூன்

செய்முறை:-

1.பச்சை பயறை காய வைத்து அவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்து பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும்.

2.ஒரு பவுல் எடுத்து அதில் பொடி செய்து வைத்துள்ள பச்சை பயறு மாவு சேர்க்க வேண்டும்.

4.பிறகு அதில் தயிர் 4 தேக்கரண்டி கலந்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

5.அதனை முடியின் வேர் பகுதியில் படுமாறு தடவ வேண்டும்.அரை மணி நேரத்திற்கு பிறகு ஷாம்பு பயன்படுத்தி முடியை நன்கு அலச வேண்டும்.

இந்த ரெமிடியை வாரத்திற்கு 2 முறை தலைக்கு உபயோகித்து வந்தோம் என்றால் தலையில் இருக்கும் பொடுகு,அரிப்பு,முடி உதிர்தல் உள்ளிட்ட பிரச்சனைகள் நீங்கி முடி அடர்த்தியாக வளரும்.