இந்த 14 மாவட்டங்களுக்கும் தொடர்ந்து இரண்டு நாட்கள் கனமழை? சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!
தற்போது அனைத்து இடங்களிலும் கனமழை பெய்து வரும் நிலையில் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகிறது. இந்நிலையில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் பிறகு இடியுடன் கூடிய மழை பொழிவு ஏற்படும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் மன்னார் வளைகுடா ,தென் தமிழக கடற்கரை மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் பலத்த காற்று வீசப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . தமிழகம் ,புதுச்சேரி ,காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் தமிழகத்தில் நீலகிரி ,கோவை ,திருப்பூர் ,தேனி ,திண்டுக்கல் ,ஈரோடு , கரூர் ,சேலம் ,நாமக்கல் ,கிருஷ்ணகிரி ,தர்மபுரி ,திருப்பத்தூர், வேலூர் ,திருச்சி போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மாயம் தெரிவித்துள்ளது .
இதனை தொடர்ந்து நாளை மறு நாள் ஆகஸ்ட் 29 ஆம் தேதி தமிழகம் ,புதுச்சேரி போன்ற இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் , அதனையடுத்து நீலகிரி ,கோவை ,திருப்பூர் ,தேனி ,திண்டுக்கல் ,மதுரை ,விருதுநகர் ,சிவகங்கை ,ஈரோடு ,சேலம் ,நாமக்கல் ,கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.