அடங்காத புயல் மழை..!! சில மணி நேரத்தில் 10 மாவட்டங்களை தும்சம் செய்ய போகும் கனமழை!!
வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயலால் தலைநரகர் சென்னை மழை நீரில் தத்தளித்து வருகிறது. இந்த புயல் இன்று முற்பகல் ஆந்திராவின் நெல்லுருக்கும் மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
தற்பொழுது சென்னையில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் மிக்ஜாம் புயல் சென்று விட்டாலும் அதன் தாக்கம் மட்டும் இன்னும் குறைந்தபாடில்லை. கடந்த சில தினங்களாக பெய்த தொடர் கனமழையால் சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழை நீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மெத்தனம் காட்டிய தமிழக அரசால் தற்பொழுது சென்னை வாசிகள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் ஆற்று வெள்ளத்தை கடல் உள்வாங்கவில்லை இதனால் மழை நீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டு குடியிருப்பு பகுதியில் மழை நீர் சூழ்ந்து உள்ளது. இந்நிலையில் அடுத்து 3 மணி நேரத்தில் தலைநகர் சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களை கனமழை பதம் பார்க்க காத்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு, வேலூர், நெல்லை, திண்டுக்கல், திருப்பூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.