உடலில் உள்ள பல நோய்களை விரட்ட ஒரு கொத்து கருவேப்பிலையை இப்படி பயன்படுத்துங்கள்!!
நம் அன்றாட சமையலில் வாசனைக்காகவும், சுவைக்காகவும் பயன்படுத்தி கூடிய கறிவேப்பிலை அதிக ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது.
கறிவேப்பிலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:-
கால்சியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், இரும்புச் சத்து, விட்டமின் சி, ஏ, பி, இ.
தினமும் கருவேப்பிலை தேநீர் அருந்துவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:-
**கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகளை அகற்றி அவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
**இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.
**முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. அதேபோல் நரை முடி பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது.
**சளி, வறட்டு இருமலை குணமாக்க உதவுகிறது.
**சர்க்கரை நோய்க்கு சிறந்த தீர்வு இந்த கறிவேப்பிலை தேநீர். இவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.
**உடலில் உள்ள கெட்ட கொழுப்பை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது.
**மலச்சிக்கல் பாதிப்பு இருக்கும் நபர்கள் தினமும் கருவேப்பிலை தேநீர் பருகுவது நல்லது.
**செரிமானக் கோளாறு இருக்கும் நபர்கள் தினமும் 1 கிளாஸ் கறிவேப்பிலை தேநீர் அருந்துவது நல்லது.
கறிவேப்பிலை தேநீர் – செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:-
*கறிவேப்பிலை – 1 கொத்து
*தேன் – சிறிதளவு
செய்முறை…
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் 1 10 கருவேப்பிலை இலை சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி அதில் சிறிதளவு தேன் கலந்து பருக வேண்டும்.