நாள்பட்ட சளி தொல்லைக்கு உடனடி தீர்வு கிடைக்க இந்த மூன்று பொருளை இப்படி பயன்படுத்துங்கள்!!

0
103
#image_title

நாள்பட்ட சளி தொல்லைக்கு உடனடி தீர்வு கிடைக்க இந்த மூன்று பொருளை இப்படி பயன்படுத்துங்கள்!!

ஒரு சிலருக்கு சளி பிடித்து விட்டால் அவை எளிதில் குணமாகுவதில்லை.இதனால் பல வித தொந்தரவுகள் ஏற்படும்.

இந்த நாள்பட்ட சளி தொல்லையால் மூக்கில் புண்,சுவாச பாதையில் பாதிப்பு ஏற்படும்.எனவே நுரையீரலில் தேங்கி உள்ள சளியை கரைத்து வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள 3 பொருட்களை பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)அதிமதுர பொடி – 1 தேக்கரண்டி
2)கடுக்காய் பொடி – 1 தேக்கரண்டி
3)மிளகு பொடி – 1 தேக்கரண்டி

அதிமதுரம் மற்றும் கடுக்காய் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.இதை இரண்டையும் 50 கிராம் அளவு வாங்கி அரைத்துக் கொள்ளவும்.இல்லையென்றால் பொடியாக வாங்கிக் கொள்ளவும்.

செய்முறை:-

ஒரு ஸ்பூன் மிளகை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.

பின்னர் அரைத்த மிளகு பொடி,அதிமதுரம் மற்றும் கடுக்காய் பொடி ஒரு தேக்கரண்டி அளவு போட்டு மிதமான தீயில் காய்ச்சவும்.

பிறகு இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடித்தால் நாள்பட்ட சளி தொல்லைக்கு உரிய தீர்வு கிடைக்கும்.