1 முடி கொட்டிய இடத்தில் 3 முடி வளர இந்த ஹேர் பேக்கை தலைக்கு பயன்படுத்துஙகள்!

0
245
#image_title

1 முடி கொட்டிய இடத்தில் 3 முடி வளர இந்த ஹேர் பேக்கை தலைக்கு பயன்படுத்துஙகள்!

முடி உதிர்வு பிரச்சனையை இன்றைய இளம் தலைமுறையினர் அதிகளவில் சந்தித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் உணவு முறை மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம், மன அழுத்தம் உள்ளிட்டவைகள் ஆகும். முடி உதிர்வு பிரச்சனையை விரைவில் சரி செய்து கொள்வது நல்லது. இல்லையெனில் வழுக்கை ஏற்பட்டு வயதான தோற்றம் ஏற்பட்டு விடும்.

தேவையான பொருட்கள்:-

*சின்ன வெங்காயம்

*முட்டை

*வெந்தயம்

*முருங்கை கீரை பவுடர்

செய்முறை…

முதலில் 1 கிண்ணத்தில் 1 ஸ்பூன் வெந்தயம் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊறவைத்துக் கொள்ளவும். பின்னர் 10 சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பின்னர் மிக்ஸி ஜாரில் ஊறவைத்த வெந்தயம், சின்ன வெங்காயம், 1 ஸ்பூன் முருங்கை கீரை பவுடர், மட்டும் முட்டையின் வெள்ளை கரு சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி தலை முழுவதும் அப்ளை செய்து 1 மணி நேரம் வரை ஊற விடவும். பின்னர் மைல்டான ஷாம்பு பயன்படுத்தி தலையை நன்கு அலசிக் கொள்ளவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வருவதன் மூலம் முடி கொட்டிய இடத்தில் மீண்டும் வளரத் தொடங்கும்.