உடலில் தேங்கி நாற்றத்தை உண்டாக்கும் கேஸ் நிமிடத்தில் வெளியேற இதை 1 ஸ்பூன் சாப்பிடுங்கள்!

0
187
#image_title

உடலில் தேங்கி நாற்றத்தை உண்டாக்கும் கேஸ் நிமிடத்தில் வெளியேற இதை 1 ஸ்பூன் சாப்பிடுங்கள்!

இன்றைய காலத்தில் உணவு மற்றும் வாழ்க்கை சூழல் முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது.
ஆரோக்கியமற்ற உணவு, முறையற்ற தூக்கம், வேலைப்பளு, மன அழுத்தம் உள்ளிட்டவைகளால் வாயுத்தொல்லை ஏற்படுகிறது. இந்த பாதிப்பை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறைப்படி பின்பற்றினால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்

*சீரகம்

*ஓமம்

*மிளகு

*சோம்பு

*பெருங்காயம்

*சுக்கு

*நெல்லிக்காய்ப்பொடி

*உப்பு

செய்முறை…

அடுப்பில் ஒரு கடாய் வைத்து சீரகம், ஓமம், மிளகு, சோம்பு, சுக்கு ஆகிவையற்றை சம அளவு சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும்.

பின்னர் இதை ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பொடித்துக் கொள்ளவும். பிறகு அதில் பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கொள்ள நன்றாக கலந்துகொள்ளவும். இதை ஒரு டப்பாவில் சேமித்து கொள்ளவும்.

இந்த பொடியை தினமும் 1 ஸ்பூன் அளவு காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை நீங்கும்.