100வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் விராட் கோலி!

0
180

இந்தியா மற்றும் இலங்கை முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலை9.30மணியளவில் ஆரம்பமாகிறது. இது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு 100வது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த சூழ்நிலையில் பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில் விராட் கோலி தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டி தொடர்பாக மனம்திறந்து உரையாற்றியிருக்கிறார்.

அப்போது அவர் பேசியதாவது 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் என்று ஒருபோதும் நான் நினைத்துப் பார்க்கவில்லை, எனக்கு இது மிக நீண்ட பயணம்தான் நான் நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கின்றேன். நான் என்னுடைய உடல் தகுதிக்காக கடுமையாக உழைத்திருக்கிறேன் இந்த நேரத்தில் கடவுளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

எனக்கும், என்னுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும், இது ஒரு மிகப்பெரிய தருணம் என்னை பொருத்த வரையில் இந்த டெஸ்ட் போட்டி தொடர்பாக மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும், நான் உணர்கிறேன். என்னுடைய பயிற்சியாளரும் இதுதொடர்பாக மகிழ்ச்சியை பகிர்ந்திருக்கிறார் என கூறியிருக்கிறார்.

நாட்டிற்காக அதிக ரன்களை எடுக்க வேண்டும் என்று என்னுடைய எண்ணம் எப்போதும் இருந்து வருகிறது நான் ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் பெரிய இரட்டை சதங்களை அடித்திருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் விராட் கோலி.

ஆகவே நீண்ட நேரம் பேட்டிங் செய்து வெற்றியடைய வேண்டும் அல்லது முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணமாக இருக்கிறது. இதனை நான் இப்போதும் பின்பற்றி வருகிறேன் என்னைப் பொறுத்தவரையில் டெஸ்ட் கிரிக்கெட் தான் உண்மையான கிரிக்கெட் என்று தெரிவித்திருக்கிறார் விராட் கோலி.

Previous articleஎம்.காம் பட்டதாரிகளே முந்துங்கள்! சென்னை பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு!
Next articleரிசர்வ் வங்கி பணிக்கான எழுத்து தேர்வு! தமிழகத்தில் 7க்கும் மேற்பட்ட மையங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here