2 நிமிடத்தில் நுரையீரல் சளியில் இருந்து விடுதலை வேண்டுமா? அப்போ இந்த கசாயம் வச்சி குடிங்கள்!!

0
191
#image_title

2 நிமிடத்தில் நுரையீரல் சளியில் இருந்து விடுதலை வேண்டுமா? அப்போ இந்த கசாயம் வச்சி குடிங்கள்!!

முதலில் சாதாரணமாக உருவாகும் சளியை குணப்படுத்த தவறினால் நுரையீலில் அதிகளவு கோர்த்து பெரும் தொந்தரவை கொடுத்து விடும்.நுரையீரல் சளியால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்.

இவ்வாறு நாள்பட்ட சளி தொந்தரவால் அவதியடைந்து வரும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கொண்டு கசாயம் செய்து குடிப்பது நல்லது.

தேவைப்படும் பொருட்கள்:-

1)தூதுவளை
2)ஓமவல்லி
3)ஆடாதோடை
4)திப்பிலி
5)தேன்

கசாயம் செய்யும் முறை:-

10 தூதுவளை இலையை உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளவும்.அடுத்து 3 ஓமவல்லி இலை மற்றும் 1 ஆடாதோடை இலையை உரலில் போட்டு இடித்து சாறு எடுத்து தூதுவளை சாறில் கலந்து கொள்ளவும்.

அதன் பின்னர் ஒரு திப்பிலியை உரலில் போட்டு இடித்து பிழிந்து வைத்துள்ள சாற்றில் போட்டு கலந்து விடவும்.

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அதன் பிறகு அரைத்த சாற்றை சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

பிறகு அடுப்பை அணைத்து விட்டு பாத்திரத்தை ஒரு மூடி போட்டு 2 நிமிடங்களுக்கு மூடவும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் கலந்து குடிக்கவும்.இந்த பானம் நுரையீரலில் கோர்த்து இருக்கும் சளியை முழுமையாக கரைத்து மலம் வழியாக வெளியேற்ற உதவுகிறது.