சபரிமலை சீசன் தொடக்கம்! சிறப்பு வந்தே பாரத் இரயில்கள் அறிவிப்பு!!

0
77
#image_title

சபரிமலை சீசன் தொடக்கம்! சிறப்பு வந்தே பாரத் இரயில்கள் அறிவிப்பு!!

சபரிமலை சீசன் தொடங்கவுள்ளதை முன்னிட்டு சிறப்பு வந்தே பாரத் இரயில்களை இரயில்வே நிர்வாகம் தற்பொழுது அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு இந்த சிறப்பு வந்தே பாரத் இரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு நவம்பர் மாதம் 16, 23, 30 ஆகிய மூன்று தேதிகளில் சிறப்பு வந்தே பாரத் இரயில் இயக்கப்படவுள்ளது. அதே போல டிசம்பர் மாதம் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு வந்தே பாரத் இரயில் இயக்கப்படவுள்ளது.
இந்த சபரிமலை சீசன் சிறப்பு வந்தே பாரத் இரயில் அன்றைய தினம் சென்னை எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும். மேலும் திருநெல்வேலி இரயில் நிலையத்திற்கு மதியம் 2 மணிக்கு செல்லும்.
அதே போல மறு மார்க்கமாக இந்த சிறப்பு வந்தே பாரத் இரயில் திருநெல்வேலி இரயில் நிலையத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு நவம்பர் மாதம் 16, 23, 30 ஆகிய தேதிகளிலும், டிசம்பர் மாதம் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படவுள்ளது.
அதே போல இந்த சபரிமலை சீசன் சிறப்பு வந்தே பாரத் இரயில் திருநெல்வேலியில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்படும். மேலும் திருநெல்வேலியில் 3 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு வந்தே பாரத் இரயில் சென்னைக்கு இரவு 11.15 மணிக்கு வந்து சேரும்.
சென்னை எழும்பூர் முதல் திருநெல்வேலி மற்றும் திருநெல்வேலி முதல் சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் இந்த சிறப்பு வந்தே பாரத் இரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய இரயில் நிலையங்களில் நின்று செல்லும். மேலும் இந்த சிறப்பு இரயில்களுக்கான முன்பதிவு தற்பொழுது தொடங்கி நடைபெற்று வருகின்றது.