உடல் பிட்டாக இருக்க வேண்டுமா!! அப்போ இந்த பீட்ரூட் ஜூஸை குடித்து பாருங்கள்!!

0
89
#image_title

உடல் பிட்டாக இருக்க வேண்டுமா!! அப்போ இந்த பீட்ரூட் ஜூஸை குடித்து பாருங்கள்!!

நம் உடலுக்கு அதிகளவு ஊட்டச்சத்துக்கள் வழங்குவதில் பீட்ரூட் கிழங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. பீட்ரூட்டில் சட்னி, பொரியல், இனிப்பு வகைகள் என்று பல வகைகளில் செய்து உண்டு வரும் நாம் அதில் ஜூஸ் செய்து பருகினால் உடல் எடை மளமளவென குறையும்.

இந்த பீட்ரூட் ஜூஸில் அதிகளவு வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, புரதங்கள், இரும்புச்சத்து, சோடியம், பொட்டாசியம் உள்ளிட்டவைகள் நிறைந்து காணப்படுகிறது. இவை இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும்.

உடல் எடையை மளமளவென குறைக்க தினமும் பீட்ரூட் ஜூஸ் பருகுவது நல்லது. இதில் உள்ள நார்ச்சத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும்.

உடல் எடை அதிகரிக்க காரணம்:-

*ஜீன் அமைப்பு

*துரித உணவு

*எண்ணெய் உணவு

*உடல் உழைப்பு இல்லாமை

*உடற் பயிற்சி இல்லாமை

பீட்ரூட் ஜூஸ் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

* பீட்ரூட் – 1

* தேன் – தேவைக்கேற்ப

*எலுமிச்சை பழம் – 1

*இஞ்சி – 1 துண்டு

செய்முறை:-

பீட்ரூட்டை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கி வைத்துள்ள பீட்ரூட் துண்டுகள், சுவைக்கேற்ப தேன், இஞ்சி சிறு துண்டு மற்றும் ஒரு முழு எலுமிச்சையின் சாறு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.

ஒரு டம்ளர் எடுத்து அவற்றை ஒரு வடிகட்டி கொண்டு நன்கு பிழிந்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் இந்த பானத்தில் ஐஸ் கியூப் சேர்த்து குடிக்கலாம்.

இந்த பீட்ரூட் ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தோம் என்றால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் பிட்டாக இருக்கும்.