ஒரே வாரத்தில் 5 கிலோ எடை குறைய வேண்டுமா? அப்போ இந்த அற்புத பானத்தை குடிங்க போதும்!!

0
68
#image_title

ஒரே வாரத்தில் 5 கிலோ எடை குறைய வேண்டுமா? அப்போ இந்த அற்புத பானத்தை குடிங்க போதும்!!

ஆரோக்கியமற்ற வாழ்க்கை மற்றும் உணவு முறையால் அதிகளவு கெட்ட கொழுப்புகள் உடலில் தேங்கி விடுகிறது.இதை ஆரம்ப நிலையில் கவனிக்காமல் விட்டோம் என்றால் உயிருக்கே ஆபத்தாகி விடும்.

எனவே உடல் எடை விரைவில் குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ரெமிடியை பயனப்டுத்தி பாருங்கள்.நிச்சயம் நல்ல பலன் விரைவில் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

*ஓமம் – 1/2 தேக்கரண்டி

*பட்டை – 1

*எலுமிச்சை பழ சாறு – 1/2 தேக்கரண்டி

செய்முறை:-

அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.பிறகு அதில் ஓமம் 1/2 தேக்கரண்டி சேர்க்கவும்.

பிறகு பட்டை தூள் 1/4 தேக்கரண்டி அல்லது பட்டை சிறு துண்டு சேர்க்கவும்.கொதித்து வந்த பின்னர் அடுப்பை அணைக்கவும்.

இதை டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும்.அதில் எலுமிச்சை சாறு 1/2 தேக்கரண்டி சேர்த்து கலக்கவும்.பின்னர் பருகவும்.இதை தொடர்ச்சியாக பருகி வந்தோம் என்றால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து மலம் வழியாக வெளியேறி விடும்.அதேபோல் மலச்சிக்கல்,மாதவிடாய் பிரச்சனை இருப்பவர்கள் இந்த ரெமிடியை தொடர்ந்து பருகி வருவதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும்.

மற்றொரு முறை:-

தேவையான பொருட்கள்:-

*சுக்கு பொடி – 1/2 தேக்கரண்டி

*கருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி

*மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

*எலுமிச்சை பழ சாறு – 1/2 தேக்கரண்டி

*தேன் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

ஒரு உரலில் சுக்கு சிறு துண்டு போட்டு பொடி செய்து கொள்ளவும்.அதேபோல் கருஞ்சீரகம் 1 தேக்கரண்டிபோட்டு பொடி செய்து கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.பின்னர் இடித்து பொடி செய்து வைத்துள்ள சுக்கு மற்றும் கருஞ்சீரகத்தை சேர்த்து கலக்கி கொள்ளவும்.

தொடர்ச்சியாக 1 சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.

இந்த பானத்தை ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும்.அதில் 1/2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலக்கவும்.தொடர்ச்சியாக 1 தேக்கரண்டி தேன் சேர்த்து பருகவும்.

இந்த ரெமிடியை இரவு உணவு உட்கொண்ட பிறகு தான் பருக வேண்டும்.இப்படி தொடர்ந்து பருகி வந்தோம் என்றால் உடலில் படிந்து உள்ள கொழுப்புகள் கரைந்து வெளியேறி விடும்.இதனால் உடல் எடை குறைந்து உடல் ஆரோக்கியமாகவும்,கட்டுக்கோப்பாகவும் இருக்கும்.