படுத்தவுடன் தூங்க வேண்டுமா! 3,2,1 ஸ்லீப் மெத்தேட் பயன்படுத்துங்க!!

Photo of author

By Sakthi

படுத்தவுடன் தூங்க வேண்டுமா! 3,2,1 ஸ்லீப் மெத்தேட் பயன்படுத்துங்க!!

படுத்தவுடன் ஆரோக்கியமான தூக்கம் வருவதற்கு த்ரி டூ ஒன் அதாவது 3,2,1 என்ற வழிமுறையை எவ்வாறு செய்வது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

நம்மில் ஒரு சிலருக்கு படுத்தவுடன் தூக்கம் வந்துவிடும். ஒரு சிலருக்கு படுத்தவுடன் தூக்கம் வராது. அவர்களுக்கு தூக்கம் வருவதற்கு சில மணி நேரங்கள் ஆகும். என்ன செய்தாலும் ஒரு சிலருக்கு இரவில் தூக்கம் வராது. அவர்கள் அனைவரும் மருத்துவர்களை ஆலோசித்து தூங்குவதற்கு மாத்திரைகள் கூட எடுப்பார்கள். ஆனால் இது அனைத்தும் நமது உடல் நலத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

நமக்கு சரியான தூக்கம் இல்லையென்றால் நாள் முழுவதும் சேர்வு உணர்வு இருக்கும். எரிச்சலாகவும் இருக்கும். பல்வேறு உடல் நல பிரச்சனைகள் ஏற்படும். எனவே ஒரு நபர் ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும். அவ்வாறு நாம் படித்தவுடன் ஆரோக்கியமான தூக்கத்தை பெறுவதற்கு 3-2-1 தூக்க முறையை பயன்படுத்தலாம்.

3-2-1 மெத்தேட்…

3… மூன்று மணி நேரம்

3-2-1 வழிமுறையில் 3 என்பது மூன்று மணி நேரம் என்பதை குறிக்கும். அதாவது நாம் தூங்கச் செல்வதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னர் சாப்பிடக்கூடாது. அல்லது சாப்பிட்டு மூன்று மணி நேரம் கழிந்து தூங்கச் செல்லலாம். ஏனென்றால் சாப்பிட்டு மூன்று மணி நேரம் கழிந்து தூங்கச் செல்லும் பொழுது உணவு செரிமானம் ஆகிவிடும். அஜீரணம் பிரச்சனைகள் ஏற்படாது. எனவே தூங்கச் செல்வதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னர் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.

2… இரண்டு மணி நேரம்

3-2-1 மெத்தேடில் 2 என்பது இரண்டு மணி நேரத்தை குறிக்கும். அதாவது எந்த வேலையாக இருந்தாலும் தூங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் நிறுத்த வேண்டும். வேலைப் பற்றிய நினைப்பை ஒதுக்கி வைத்து விட்டு மூளைக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் மூளைகளின் செயல்பாட்டை நிறுத்தி மூளையை ஓய்வு பெறச் செய்து பின்னர் மற்ற உடல் உறுப்புகளுக்கு அமைதியை அளித்து நம்மை தூங்குவதற்கு தயார் செய்கின்றது. இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் வேலைகளை நிறுத்துவது என்பது நடைமுறையில் கடினமான பிரச்சனை என்றாலும் ஆரோக்கியமான தூக்கத்தை பெறுவதற்கு இதை செய்துதான் ஆக வேண்டும்.

1… ஒரு மணி நேரம்

3-2-1 மொத்தேடில் 1 என்பது ஒரு மணி நேரத்தை குறிக்கும். நாம் தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு செல்போன், கம்ப்யூட்டர், லேப்டாப், டிவி போன்றவற்றை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். நாம் ஒரு நாளில் அதிகபட்சமாக 12 மணி நேரம் செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டர், டிவி போன்ற சாதனங்களை பயன்படுத்தி வருகின்றோம். இந்த மின்னணு சாதனங்கள் மூலமாக வரும் நீலக்கதிர்கள் நம்முடைய உடலில் தூக்கத்தை வரவழைக்கக் கூடிய மெலடொனின் ஹார்மோனின் உற்பத்தியை தடை செய்கின்றது. தூங்கும் சுழற்சி பாதிக்கப்பட்டு அடுத்த நாள் கண் விழிப்பது கடினமாகின்றது.