நொடியில் முகம் பளபளப்பாக மாற வேண்டுமா! தக்காளியுடன் இரண்டு பொருட்களை பயன்படுத்துங்க!!
நமது முகம் ஒரு நேரியல் பளபளப்பாக தக்காளியுடன் வெறும் இரண்டு பொருட்களை சேர்த்து பயன்படுத்தலாம். அது என்னென்ன பொருட்கள் மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
முகத்தின் பளபளப்பை அதிகரிக்க தக்காளியுடன் மஞ்சள் மற்றும் சர்க்கரையை பயன்படுத்தலாம். அதை எவ்வாறு செய்வது என்பதை பற்றி அடுத்து பார்க்கலாம்.
முகத்தை பளபளப்பாக மாற்றும் முதல் வழிமுறை…
முகத்தை பளபளப்பாக மாற்றுவதற்கு நன்கு பழுத்த ஒரு தக்காளியை எடுத்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் மஞ்சள் பொடி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இதை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் இது காய்ந்ததும் குளிர்ந்த நீரை கொண்டு முகத்தை கழுவி விடலாம். பிறகு மாய்ஸ்சரைசர் தடவ வேண்டும். இதை தொடர்ந்து செய்யும் பொழுது சருமம் இறுக்கமாக மாறும். முகம் பளபளப்பாக மாறும்.
முகத்தை பளபளப்பாக மாற்றும் இரண்டாவது வழிமுறை…
இந்த முறையில் ஒரு தட்டு எடுத்து அதில் சர்க்கரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் தக்காளியை எடுத்து பாதியாக வெட்டிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் பாதியாக நறுக்கிய தக்காளியை எடுத்து சர்க்கரையை தொட்டு அதை வைத்து நம் முகத்தில் மெதுவாக மென்மையாக தேய்க்க வேண்டும். இதை வாரம் ஒருமுறை செய்யலாம்.