முகம் அழகாக பட்டுப்போல் மின்ன வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..

0
68

முகம் அழகாக பட்டுப்போல் மின்ன வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..

இன்றைய காலக்கட்டத்தில் முகம் ரொம்ப அழகாக இருக்க வேண்டும். தோல் பளபளவென இருக்க வேண்டும் என்று நாம் அனைவருக்கும் ஆசை இருக்கும். அதற்காக ஒரே மாதத்தில் வெள்ளையாக வேண்டும் என்று சந்தைகளில் விற்பனை செய்யப்படும் காஸ்மெட்டிக்ஸ் வாங்கி பயன்படுத்துவார்கள். அப்படி செய்யும் போது அது பல பக்க விளைவுகளை முகத்தில் ஏற்படுத்தி விடும்.

கவலை விடுங்கள்… கீழே கொடுக்கும் சில அழகு குறிப்புகளை எடுத்து உங்களை நீங்கள் இயற்கையாகவே அழகாகிக்கொள்ளலாம்..

1. குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவுவ வேண்டும். இது உங்கள் சருமத்தை உடனடியாக டோன் செய்து, புத்துணர்ச்சியை கொடுக்கும்.

2. தேனில் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து, அதில் தயிர் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால் முகம் பளபளவென பொலிவுப்பெறும்.

3. சர்க்கரையில் சிறிதளவு எலுமிச்சை சாறு பிழிந்து அதை சருமத்தில் மசாஜ் செய்தால், முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, அழுக்குகள் அனைத்தும் வெளியேறி சருமம் பொலிவுபெறும்.

4. தினமும் தேங்காய் தண்ணீரில் 2 முறை முகத்தை மசாஜ் செய்யுங்கள். தேங்காய் எண்ணெய், தேங்காய் தண்ணீரை கொண்டு முகத்தை 15 நிமிடம் ஊற வைத்து முகத்தை கழுவுங்கள். கருமை நீங்கி முகம் பளிச்சிடும்.

5. தினமும் அதிகளவில் தண்ணீர் குடியுங்கள். இது உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, சருமம் பொலிவு பெறும். நிறைய தண்ணீர் குடித்தால் நல்ல தூக்கம் கிடைக்கும். ஆதலால் தண்ணீர் ஒரு மனிதனுக்கு இன்றியமையாதது.

6. 2 ஸ்பூன் கடலை எண்ணெய்யில் எலுமிச்சைச் சாற்றை பிழிந்து அதை முகத்தில் தடவி கரும்புள்ளிகள் மறைந்து முகம் மென்மையாகும்.

7. பப்பாளிப் பழத்தை நன்றாக மசித்து, அதை முகத்தில் தடவி 2 மணி நேரம் ஊற வைத்து முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாகும்.

8. தக்காளி பழத்தை பிசைந்து முகத்தில் தடவி, 2 மணி நேரம் கழித்து கழுவினால் முகம் பளிச்சிடும்.

9. மாதுளம் பழ தோலைக் காய வைத்து பொடி செய்து, அதில் எலுமிச்சைச் சாற்றில் கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து முகத்தை கழுவினால் பருக்கள் மறைந்து முகம் அழகாகும்.

10. கஸ்தூரி மஞ்சள் கிழங்கை பொடி செய்து பசும்பாலில் குழைத்து முகத்தில் தேய்த்து அரை மணி நேரம் ஊறிய பின் முகத்தைக் கழுவினால் முகம் பளிச்சிடும்.