வெறும் வயிற்றில் ஊற வைத்த வெண்டைக்காயை சாப்பிட்டு வந்தால் இவ்வளவு நன்மையா? அட தெரியாம போச்சே !!

0
46

வெறும் வயிற்றில் ஊற வைத்த வெண்டைக்காயை சாப்பிட்டு வந்தால் இவ்வளவு நன்மையா? அட தெரியாம போச்சே !!

மலிவாக கிடைக்கும் வெண்டைக்காயில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. வெண்டைக்காயை சிறுவர்கள் முதல் பெரியவரகள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவார்கள்.  வெண்டைக்காயில், புரதம், கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள், தயாமின் உட்பட பல ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. வெண்டைக்காயில் எந்த அளவிற்கு மருத்துவ குணம் உள்ளதோ, அதே அளவிற்கு வெண்டைக்காய் நீரிலும் அதிகமான மருத்துவ குணம் உள்ளன.

எப்படி வெண்டைக்காய் தண்ணீர் செய்வது?

10 வெண்டைக்காய்களை எடுத்து அதன் நடுப்பகுதியை வெட்டி, 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின்னர், இரவு முழுதும் ஊறிய வெண்டைக்காய்களை எடுத்து விட்டு அந்த ஊற வைத்த தண்ணீரை குடிக்க வேண்டும்.

ஊறவைத்த வெண்டைக்காய் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம் –

சர்க்கரை நோய்

வெறும் வயிற்சில் ஊறவைத்த வெண்டைக்காய் தண்ணீர் குடித்து வந்தால், சர்க்கரை நோய் வகைகளான டைப் 1, டைப் 2 மற்றும் கர்ப்பகால நீரிழிவு போன்றவற்றை குணமாகும். இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும்.

உடல் குளிர்ச்சிக்கு

வெறும் வயிற்றில்  ஊறவைத்த வெண்டைக்காய் தண்ணீர் குடித்து வந்தால், வெண்டைக்காயில் உள்ள நீர்ச்சத்து, உடலை குளிர்ச்சியாக வைக்கிறது. கொல்ஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்தும்.

கர்ப்பிணிகளுக்கு

வெறும் வயிற்றில்  ஊறவைத்த வெண்டைக்காய் தண்ணீர் குடித்து வந்தால், வெண்டைக்காயில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.

மலச்சிக்கல்

வெறும் வயிற்றில்  ஊறவைத்த வெண்டைக்காய் தண்ணீர் குடித்து வந்தால், வெண்டைக்காய் வழவழப்பில் உள்ள நார்ச்சத்துமலச்சிக்கல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிற்று உபாதைகளை குணப்படுத்துகிறது.

புற்றுநோய்க்கு

வெறும் வயிற்றில்  ஊறவைத்த வெண்டைக்காய் தண்ணீர் குடித்து வந்தால், புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு தடுக்கும். உடலில் உள்ள பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தும்.

கல்லீரலுக்கு

வெறும் வயிற்றில்  ஊறவைத்த வெண்டைக்காய் தண்ணீர் குடித்து வந்தால், கல்லீரல் நன்கு செயல்பட தொடங்கிவிடும்.

உடல் எடை குறைக்க

வெறும் வயிற்றில் ஊறவைத்த வெண்டைக்காய் தண்ணீர் குடித்து வந்தால், அடிக்கடி ஏற்படும் பசி உணர்வு கட்டுப்படும். உடலின் எடையும் குறையும்.

சுவாச பிரச்சனைகளுக்கு

வெறும் வயிற்றில் ஊறவைத்த வெண்டைக்காய் தண்ணீர் குடித்து வந்தால், ஆஸ்துமா மற்றும் சுவாச கோளாறுகள் சரியாகும்.

author avatar
Gayathri