எலி ஒரு சூப்பர் ஹீரோ! தங்கப்பதக்கம் வென்ற எலி!

எலி ஒரு சூப்பர் ஹீரோ! தங்கப்பதக்கம் வென்ற எலி!

கம்போடிய நாட்டில் கன்னிவெடிகளை அகற்றி எலிக்கு சாதனை புரிந்துள்ளது. அந்த எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கி கெளரவித்துள்ளது கம்போடியா நாடு. இந்த நிகழ்வு பாராட்டுகளைக் குவித்து வருகிறது. கம்போடியா நாட்டில் பாதுகாப்புக்காக 5 மில்லியன் வரை கன்னி வெடிகள் புதைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த கன்னிவெடிகளால் 64 ஆயிரம் பேருக்குமேல் இறந்துள்ளனர். இதனால், கம்போடிய அரசு கொஞ்சம் கொஞ்சமாக கன்னிவெடிகளை அகற்றி வரும் பணியை மேற்கொண்டு வருகிறது. கன்னிவெடிகளை அகற்றுவதில் மக்கள் ஈடுபட்டால் மக்கள் இறக்கும் அபாயம் இருப்பதனால் விலங்குகளை … Read more

கரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணை கொலை செய்ய முடிவு !!

கரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணை கொலை செய்ய முடிவு !!

கடந்த சில நாட்களாக ஆஸ்திரேலியா கடற்பகுதியில் ஒதுங்கிய திமிங்கலங்களை கருணை கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள டால்மியா கடற்கரை பகுதியில், கடந்த சில நாட்களாக 500 நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரையொதுங்கி வருகின்றனர்.அவற்றினை பாதுகாக்கும் முயற்சியில் தன்னார்வலர்கள் பலர் மூலம் மீட்பதும், கடலுக்குக் கொண்டு சென்று விடுவதும் ,தண்ணீரை மேல் ஊற்றி ஈரப்பதத்துடன் வைப்பது போன்ற பணிகளை செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக சுமார் 500-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய … Read more

இந்தியாவுடனான முக்கிய சேவையை ரத்து செய்தது சவுதி அரேபியா

Saudi Arabia

இந்தியாவில் நாளுக்கு நாள் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவுக்கான விமான சேவையை தற்காலிகமாக ரத்து செய்து சவுதி அரேபியா அறிவித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரையில் 56 லட்சத்து 46 ஆயிரம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில், குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தாலும், தினமும் சராசரியாக சுமார் ஒரு லட்சம் பேருக்கு பாதிப்பு என்ற நிலையை இந்தியா தற்போது சந்தித்துள்ளது. இந்த நிலையில், கொரோனா … Read more

300க்கு மேற்பட்ட யானைகள் பலி!விஷ நீரை பருகியதால் பரிதாபம்!

300க்கு மேற்பட்ட யானைகள் பலி!விஷ நீரை பருகியதால் பரிதாபம்!

300க்கு மேற்பட்ட யானைகள் பலி!விஷ நீரை பருகியதால் பரிதாபம்! தென் ஆப்பிரிக்காவின் நாட்டில் போட்ஸ்வானாவில் விஷம் கலந்த நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் பலியான சம்பவம் அங்கு உள்ள மக்களை அதிர செய்துள்ளது. போட்ஸ்வானா வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்களின் துணை இயக்குநர் சிரில் தாவோலோ, விஷம் உண்டான நீரைப் பருகியதால் 330 யானைகள் பலியாகி உள்ளதாகத் தெரிவித்துள்ளார். நீரில் மற்றும் சில நேரங்களில் மண்ணில் காணப்படும் நுண்ணிய உயிரினங்கள் சயனோ பாக்டீரியாக்கள் எனப்படுகின்றன. பொதுவாக … Read more

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பிறப்புறுப்பு வெட்டப்படும்! அதிரடி சட்டம் பிறப்பித்த அரசு!

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பிறப்புறுப்பு வெட்டப்படும்! அதிரடி சட்டம் பிறப்பித்த அரசு!

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பிறப்புறுப்பு வெட்டப்படும்! அதிரடி சட்டம் பிறப்பித்த அரசு! கொரோனவைரஸ் தொற்றால்,உலகமே முடக்கப்பட்டிருக்கும் நிலையிலும் கூட இந்த பாலியல் வன்கொடுமை குற்றங்கள் ஓய்ந்தபாடில்லை.இதில் நைஜீரியா நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் அதிக அளவில் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.நைஜீரியா நாட்டில் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 800 பாலியல் வழக்குகள் பதிவாகியுள்ளன.இவ்வாறு பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே இருப்பதினால் அந்நாட்டில் ஏற்கனவே உள்ள சட்டத்தை மாற்றியமைத்து,கடுமையான சட்டத்தை அந்நாட்டு அரசு … Read more

தடுப்பு மருந்தை ஏற்கனவே வாங்கிய பணக்கார நாடுகள்

தடுப்பு மருந்தை ஏற்கனவே வாங்கிய பணக்கார நாடுகள்

பணக்கார நாடுகள், எதிர்காலத்தில் வரப்போகிற கொரோனா தடுப்பு மருந்துகளில் பாதியை ஏற்கெனவே வாங்கிவிட்டதாக Oxfam வெளியிட்ட ஆய்வு கூறுகிறது. அந்தப் பணக்கார நாடுகளின் மொத்த மக்கள்தொகை, உலக மக்கள் தொகையில் 13 விழுக்காடு மட்டுமே. மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களும் முன்னிலையில் உள்ள 5 தடுப்பு மருந்துத் தயாரிப்பாளர்களும் செய்துகொண்ட ஒப்பந்தங்களை அரசாங்கச் சார்பற்ற அமைப்பான Oxfam ஆராய்ந்தது. அந்த 5 தடுப்பு மருந்துத் தயாரிப்பாளர்களின் மொத்த உற்பத்தித் திறன் 5.9 பில்லியன் மருந்து அளவு என Oxfam … Read more

டிரம்ப் மீண்டும் பதவிக்கு வந்தால் என்னவெல்லாம் நடக்குமோ

டிரம்ப் மீண்டும் பதவிக்கு வந்தால் என்னவெல்லாம் நடக்குமோ

அமெரிக்காவின் மேற்குக் கரையோரம் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ மெக்ஸிகோஎல்லை வரை பரவியுள்ளது. குளிர்பருவம் தொடங்கிவிட்டதால், விரைவில் நிலைமை சீராகும் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறினார். ஆனால், விஞ்ஞானரீதியாக அதற்கு வாய்ப்பில்லை என்று இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர். பருவநிலை மாற்றத்தைவிட, காடுகளை நிர்வாகம் செய்வதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளே, தீக்கான காரணம் என்று டிரம்ப் நம்புகிறார். அதிபர் தேர்தல் வேட்பாளர் ஜோ பைடன் டிரம்ப்பின் கருத்துகளைச் சாடியுள்ளார். பருவநிலை மாற்றத்தைக் காரணமாக ஏற்றுக்கொள்ள மறுக்கும் டிரம்ப் மீண்டும் பதவிக்குவந்தால், … Read more

இவ்வளவு டாலரில் தயாரித்த முகக் காப்பா?

இவ்வளவு டாலரில் தயாரித்த முகக் காப்பா?

பிரெஞ்சு நிறுவனமான Louis Vuitton, 1,300 வெள்ளி விலையில் முகக் காப்பு ஒன்றை வெளியிடத் திட்டமிடுகிறது. முகக் காப்பின் இறுதி விலை இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. அந்தத் தனிநபர் பாதுகாப்புச் சாதனம் 2021 Cruise Collection தொகுப்பில் இடம்பெற்றது. LV சின்னத்துடன் சிறு தங்கப் பொத்தான் பதிக்கப்பட்டுள்ளது. இழுக்கக்கூடிய பட்டைவாரை தலையைச் சுற்றிப் போட்டு கொள்ளலாம் முகக் காப்பைத் திருப்பியும் போட்டுக் கொள்ளலாம். அவ்வாறு செய்யும்போது, கண்களைச் சூரிய ஒளியிலிருந்தும் வெளிச்சத்திலிருந்தும் பாதுகாக்கலாம்.

உலகம் முழுவதும் இத்தனை மில்லியனை தாண்டிய கொரோனா

உலகம் முழுவதும் இத்தனை மில்லியனை தாண்டிய கொரோனா

உலக அளவில் கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 30 மில்லியனைத் தாண்டியுள்ளது; கிட்டத்தட்ட 9.5 லட்சம் பேர் மாண்டுவிட்டனர். இந்நிலையில், ஐரோப்பாவில் கிருமித்தொற்று அபாயகரமான வேகத்தில் பரவுவதாக உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. சில நாடுகள் தனிமைப்படுத்தும் காலத்தைக் குறைப்பதற்கு எதிராக அது கருத்துரைத்தது. கடந்த 2 வாரங்களில் பாதிக்கும்-மேற்பட்ட ஐரோப்பிய நாடுகளில் கிருமித்தொற்று உறுதியாவோர் எண்ணிக்கை 10 விழுக்காட்டுக்கும்-மேல் உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் 6.6 மில்லியனுக்கும் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று உறுதியானது.

பழைய நிலைமைக்கு மீண்டு வர ஐந்து ஆண்டுகள் கூட ஆகலாம்

பழைய நிலைமைக்கு மீண்டு வர ஐந்து ஆண்டுகள் கூட ஆகலாம்

உலக வங்கியின் தலைமைப் பொருளியல் நிபுணர் கார்மென் ரெய்ன்ஹார்ட் பேசும்போது கிருமிப்பரவலிலிருந்து உலகப் பொருளியல் மீண்டும் வர எப்படியும் ஐந்து ஆண்டுகளாவது தேவைப்படும் என்று அதிர்ச்சி தகவல் கூறினார். கொரோனா கிருமிப்பரவலால் ஏற்பட்ட பொருளியல் மந்தநிலை ஒருசில நாடுகளில் தொடர்ந்து நீடிக்கும் என்ற திருமதி ரெய்ன்ஹார்ட், வசதி குறைந்தவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவர் என்றார். அதன் விளைவாக, சமுதாய ஏற்றத் தாழ்வு அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.