சீனாவில் களைகட்டிய ராணுவ வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு

சீனாவில் களைகட்டிய ராணுவ வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு

ஜப்பானை போரில் வீழ்த்தி இந்த ஆண்டுடன் 75 ஆண்டுகள் நிறைவடைகிறது.  இதனையொட்டி ஜப்பானை போரில் வீழ்த்தியதற்கான பவள விழா கொண்டாட்டம் சீனாவில் களைகட்டி உள்ளது. இதனை தொடர்ந்து அந்நாட்டின் தலைநகர் பீஜி​ங்கில் ராணுவ வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு நடைபெற்றது. சீன அதிபர் ஜின்பிங் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.  இந்த கொண்டாட்டத்தில், நாட்டின் மிக மூத்த தலைவர்களும், தியாகிகளும் கலந்து கொண்டனர்.  போர் வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து உரிய மரியாதையும் செலுத்தப்பட்டது.

இந்தியாவின் அண்டை நாட்டையும் விட்டுவைக்காத கொரோனா

இந்தியாவின் அண்டை நாட்டையும் விட்டுவைக்காத கொரோனா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 56 லட்சத்தை கடந்துள்ளது. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா வேகமெடுத்துள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 78 ஆயிரத்து 512  பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கொரோனா வைரசானது … Read more

செவ்வாய் கிரகத்தை பற்றி அதிர்ச்சி தகவல் கூறிய விஞ்ஞானிகள்

செவ்வாய் கிரகத்தை பற்றி அதிர்ச்சி தகவல் கூறிய விஞ்ஞானிகள்

செவ்வாய் அதன் மேற்பரப்பில் உள்ள இரும்பு, நீர் மற்றும் ஆக்ஸிஜன் காரணமாக துருப்பிடித்து இருப்பதாக நீண்ட காலமாக அறியப்பட்டாலும், சமீபத்தில் காற்று சந்திரன் அதன் மீதும் துருபிடித்து உள்ளது என்பதற்கான ஆதாரங்களைக் விஞ்ஞானிகள் கண்டுஆச்சரியப்பட்டனர்.  இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் சந்திரயான் -1 சுற்றுப்பாதையில் இருந்து தரவை மதிப்பாய்வு செய்து சயின்ஸ் அட்வான்ஸ் இதழில் வெளியிடப்பட்டு உள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது. சந்திராயன் 2008 ஆம் ஆண்டில் சந்திரனின் மேற்பரப்பை ஆய்வு செய்யும் போது நீர் பனியைக் கண்டுபிடித்து … Read more

ஜப்பானின் புதிய பிரதமர் ஆவதற்கு இவருக்குதான் வாய்ப்பு அதிகம்

ஜப்பானின் புதிய பிரதமர் ஆவதற்கு இவருக்குதான் வாய்ப்பு அதிகம்

ஜப்பானின் நீண்டகால பிரதமர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரரான ஷின்ஜோ அபே, தனது உடல் நலனை கருத்தில் கொண்டு அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்படி ஜப்பானின் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு வருகிற 14-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் மட்டுமே பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் வெளியுறவு மந்திரி பமியோ கிஷிடா, முன்னாள் ராணுவ மந்திரி ஷிகெரு இஷிபா ஆகியோர் பிரதமர் பதவிக்கு போட்டியிட … Read more

வெளிநாட்டில் நீண்ட ஆண்டுகளுக்கு தவித்து வந்த இந்திய தொழிலாளி

வெளிநாட்டில் நீண்ட ஆண்டுகளுக்கு தவித்து வந்த இந்திய தொழிலாளி

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் கமாரெட்டி மாவட்டத்தில் உள்ள சித்தமனப்பள்ளி என்ற கிராமத்தை சேர்ந்தவர் நீல எல்லையா. இவர் கடந்த 2004-ம் ஆண்டு கட்டுமான தொழிலாளியாக துபாய்க்கு வந்து வேலை செய்தார். இந்த நிலையில் அவர் பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால் கடந்த 16 ஆண்டுகளாக நாட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வந்தார். இதற்கிடையே அமீரக அரசு கடந்த மே 18-ந் தேதி அளித்த பொதுமன்னிப்பில் விசா மற்றும் ஆவணங்கள் இல்லாதவர்கள் நாட்டை விட்டு வெளியேற அனுமதி அளித்தது. தற்போது … Read more

விமான நிலையத்தில் புதிய முறையை கொண்டுவந்துள்ள துபாய்

விமான நிலையத்தில் புதிய முறையை கொண்டுவந்துள்ள துபாய்

துபாயில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் சர்வதேச விமான நிலையத்தில் அதிகமானோர் வெளிநாடுகளுக்கு பயணம் செல்ல தொடங்கியுள்ளனர். அதேபோல் வெளிநாடுகளில் இருந்து துபாய்க்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. விமானத்திற்கு செல்லும் பயணிகள் தங்கள் பாஸ்போர்ட்டின் முகப்பு பகுதியை ‘ஸ்மார்ட் கேட்’ நுழைவு பகுதியில் உள்ள உணரும் கருவியில் வைத்தால் போதும். தானியங்கி முறையில் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு குடியேற்ற பிரிவை கடந்து செல்ல அனுமதி வழங்கப்படும். அதாவது கண்ணாடி கதவு தானாக திறந்து வழிவிடும். இதன் … Read more

சாலையோரம் வெடித்த கண்ணிவெடியால் மூன்று பேர் பலி

சாலையோரம் வெடித்த கண்ணிவெடியால் மூன்று பேர் பலி

ஆப்கானிஸ்தானின் நங்கார்ஹர் மாகாணம் பச்சேரகம் மாவட்டத்தில் சாலையோரம் பயங்கரவாதிகள் கண்ணிவெடியை புதைத்து வைத்திருந்தனர். இன்று காலை அப்பகுதி வழியாக பொதுமக்கள் நடந்து சென்றபோது திடீரென கண்ணிவெடி வெடித்துச் சிதறியது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார். கண்ணிவெடி தாக்குதல் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

வெனிசுலா அதிபரை கொல்ல திட்டம் தீட்டுகிறாரா டிரம்ப்

வெனிசுலா அதிபரை கொல்ல திட்டம் தீட்டுகிறாரா டிரம்ப்

எண்ணெய் வளமிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடியும், அரசியல் குழப்பமும் நிலவி வருகிறது. தனது நாட்டில் நிலவும் அரசியல் குழப்பத்துக்கு அமெரிக்காவே முழு காரணம் என்றும், வெனிசுலாவின் ஆட்சியை கவிழ்ப்பதற்கு அமெரிக்கா முயற்சிப்பதாகவும் அதிபர் நிக்கோலஸ் மதுரோ தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன்னை கொலை செய்ய உத்தரவிட்டுள்ளதாக வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ … Read more

உலக சுகாதார நிறுவனத்துக்கு அதிர்ச்சி அளித்த அமெரிக்கா

உலக சுகாதார நிறுவனத்துக்கு அதிர்ச்சி அளித்த அமெரிக்கா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 56 லட்சத்தை கடந்துள்ளது. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா வேகமெடுத்துள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 78 ஆயிரத்து 512  பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்குவதற்கும், … Read more

அமெரிக்க அரசியல் மற்றும் தேர்தல் களத்தில் நடக்க போகும் முக்கிய நிகழ்வு

அமெரிக்க அரசியல் மற்றும் தேர்தல் களத்தில் நடக்க போகும் முக்கிய நிகழ்வு

அமெரிக்காவில் தற்போது பெரிய பிரச்சனையாக வெடித்து வருவது கருப்பினத்தவர் மீது போலீஸ்  வெளிப்படுத்தும் வேற்றுமைதான்.  கடந்த மே மாதம் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவரை போலீஸ் கைது செய்ய முற்பட்டனர். அப்போது அவரின் கழுத்தில் போலீஸ் அதிகாரி தனது முழங்காலை வைத்து நெரித்ததில் அவர் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் மாபெரும் போராட்டம் வெடித்தது. அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு நீதிகேட்டு போராட்டங்கள் நடைபெற்றன இதற்கிடையில், நவம்பர் மாதம் அமெரிக்காவில் … Read more