இந்த விளையாட்டை உடனே தடை பண்ணுங்க! வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர்!

0
61

கரூரில் ஒரு இளைஞர் தன்னுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் ஃப்ரீ பையர் விளையாட்டை தடை செய்ய வேண்டும் எனத்தெரிவித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இது கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கரூர் தாந்தோணி மலை சிவசக்தி நகர் 5வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சத்தியபாமா இவருடைய மகன் சஞ்சய் இவர் தந்தை ராஜலிங்கம் மனைவியை பிரிந்ததால் சஞ்சய் தாயுடன் வசித்து வருகிறார்.

கேடரிங் படித்திருக்கின்ற இவர் மேற்படிப்பு படிக்க வைக்காததால் மன உளைச்சலில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், கடந்த 6 ம் தேதி தனது வீட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக தகவல் அறிந்த தாந்தோணிமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சஞ்சய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகிறார்கள்.

அதிலும் குறிப்பாக சஞ்சய் இணையதளத்தில் பிரீபையர் விளையாட்டு, இணையதள ரம்மி, உள்ளிட்டவற்றை விளையாடி வந்ததாகவும், ஒரு சில முறை வெற்றிப்பெற்றதால் அதற்கு அடிமையானதாகவும் சொல்லப்படுகிறது.

இப்படியான நிலையில், சஞ்சய் ஐடியை யாரோ ஹேக் செய்து தோல்வியுற்றதால் அவருடைய வங்கி கணக்கிலிருந்து 10,000 ரூபாய் வரையில் எடுக்கப்பட்டதாகவும், ஆகவே இதன் காரணமாக, அவர் மன உளைச்சலிலிருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், இந்த விளையாட்டிற்கு யாரும் அடிமையாகி விடாதீர்கள். என்னை மாதிரி ஏமாந்து விடாதீர்கள், ஏதாவது சாதித்துக் காட்டுங்கள் என்று வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

அதில் கூட இருந்தே எப்படிடா குழி பறிக்க முடியுது இப்பவும் ஒன்றுமில்லை யார் என்று சொல்லிவிடுங்கள். வேறு எண்ணிலிருந்து அனுப்பிருங்கடா ஐடி பாஸ்வேர்ட் டிப்ரஷன் இருக்கு யாரும் விளையாட்டிற்கு அடிமையாகாதீர்கள் என்றும் ஸ்டேட்டஸ் வைத்திருக்கிறார்.

இதன் காரணமாக, இணையதளத்தில் ஃபிரிபையர், ரம்மி, உள்ளிட்ட விளையாட்டுக்கு அடிமையாக இருந்த சஞ்சய்யின் ஐடியை யாரோ ஹேக் செய்து விளையாடி அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்ட விரக்தியின் காரணமாக, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என தெரிவித்து அவருடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை அனைவரும் பகிர்ந்து வருவதால் அவர் வசிக்கும் பகுதியில் பரபரப்பு உண்டாகி இருக்கிறது.

இதுதொடர்பாக சஞ்சய் நண்பர் வழங்கிய பேட்டியில் ஃப்ரீ பெயர் விளையாடி தான் சஞ்சய் உயிரிழந்துள்ளார். ஆனால் காவல்துறையினரும், அவருடைய உறவினர்களும், இதனை மறைக்கிறார்கள். ஒருசில விளையாட்டில் வெற்றி பெற்றதால் அவர் தொடர்ந்து விளையாடியுள்ளார்.

யாரோ அவருடைய ஐடியை ஹேக் செய்து அவருக்கு கிடைத்த பரிசுப் பணத்தை வைத்து விளையாடி நஷ்டம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதன்காரணமாக, விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.