இந்த பொடியில் இவ்வளவு நன்மைகளா? பல்வேறு வகையான பிரச்சினைக்கு தீர்வு

0
244
#image_title

நம் அன்றாட வாழ்வில் சமையலில் தினமும் கருவேப்பிலையை பயன்படுத்துகிறோம். கருவேப்பிலை எவ்வளவு பயன் தருகிறது என்பதை பலர் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர்.
கவலை வேண்டாம் கருவேப்பிலை காய்ந்து விட்டது எனில் அதிலிருந்து சில பயனுள்ள குறிப்புகளை நாம் பார்ப்போம்.
கருவேப்பிலை நம் உணவில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
காய்ந்துபோன கருவேப்பிலைகளை வீட்டினில் உலர விட வேண்டும் அது நன்றாக காய்ந்த பின் அந்த இலைகளை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும் அரைத்த கருவேப்பிலை பவுடரை தேவை என்றால் சலித்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த கருவேப்பிலைப் பொடியை நம் உணவிலோ அல்லது குழம்பு வகைகளிலோ இதனை சேர்த்து சாப்பிடலாம்.
கருவேப்பிலையில் நிறைய நன்மைகள் உள்ளது ஆனால் நாம் அதை உணவு சாப்பிடும் போது ஒதுக்கி வைத்திருக்கிறோம் ஆனால் அவ்வாறு செய்யாமல் கருவேப்பிலையை நாம் சாப்பிட வேண்டும்.

கருவேப்பிலை பொடியை பயன்படுத்துவது எப்படி ?
நன்றாக கொதிக்க வைத்த தண்ணீரை ஒரு டம்ளர் அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதில் ஒரு ஸ்பூன் கருவேப்பிலை பொடியை சேர்த்து நன்றாக கலந்து விடவும். பின்னர் அதை இரண்டு நிமிடம் மூடி வைக்க வேண்டும்.
பின்ன அந்தத் தண்ணீரை நாம் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நம் உடலில் பல மாற்றங்கள் நிகழும்.
குழந்தைகள் இந்த முறையை பின்பற்ற மாட்டார்கள் அதனால் இந்த கருவேப்பிலை பொடியை நாம் தோசையில் தூவி தரலாம் மற்றும் குழம்பு வகைகளிலும் இந்த பொடியை சேர்த்து தரலாம்.
அல்லது இந்த கருவேப்பிலையை வைத்து இட்லி பொடி போன்றும் செய்து தரலாம்.
கருவேப்பிலை பொடியை நாம் தேங்காய் எண்ணெயில் சேர்த்து ஊறவைத்து அதனை வடிகட்டி நம் கூந்தலுக்கு பயன்படுத்தலாம்.

நன்மைகள்:
கருவேப்பிலை நம் உணவில் சேர்ப்பதால் கண்பார்வை பலப்படும்.
நம் கூந்தல் நன்றாக வளர இது பயன்படுகிறது கருவேப்பிலையில் உள்ள சத்துக்கள் நம் முடியை பலப்படுத்துகிறது.
ரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள் கருவேப்பிலை பயன்படுத்தினால் அத்தகைய பிரச்சினை நாளடைவில் குறைந்து விடும்.
இதில் இரும்புச்சத்து நிறைய உள்ளது.
கருவேப்பிலையை நாம் பச்சையாகவும் உண்ணலாம் அதில் நிறைய நன்மைகள் காணப்படுகிறது.
அவ்வாறு கருவேப்பிலையை பச்சையாக உண்ண விரும்பாதவர்கள் இந்த கருவேப்பிலை பொடியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.