தினமும் “தக்காளி ஜூஸ்” அருந்துவதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்!!
தேவையான பொருட்கள்:-
*தக்காளி – 3
*சர்க்கரை – தேவையான அளவு
*எலுமிச்சை பழம் – பாதி
செய்முறை:-
முதலில் தக்காளி பழம் எடுத்து அதை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து 2 அல்லது 3 துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
பின்னர் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளி பழத்தை சேர்த்து ஒரு முறை அரைக்கவும்.பிறகு தேவையான அளவு சர்க்கரை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.
பிறகு இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி அதில் பாதி எலுமிச்சம் பழத்தின் சாற்றை பிழிந்து கொள்ளவும்.பின்னர் இதை நன்கு கலந்து பருகவும்.
தக்காளி ஜூஸ் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்:-
*தக்காளி பழத்தில் அதிகளவு வைட்டமின் ஏ,கே நிறைந்து இருக்கிறது.இவை கண் சம்மந்தமான பாதிப்பை சரி செய்ய பெரிதும் உதவுகிறது.
*தினமும் தக்காளி பழம் ஜூஸ் பருகுவதன் மூலம் தோல் தொடர்பான பாதிப்பு விரைவில் சரியாகும்.
*நம்மில் பெரும்பாலானோர் அவதிப்பட்டு வரும் பாதிப்புகளில் ஒன்று உடல் பருமன்.இந்த பாதிப்பை சரி செய்ய தினமும் தக்காளி ஜூஸ் அருந்துவது நல்லது.
*அதேபோல் தக்காளி ஜூஸ் பருகுவதன் மூலம் கல்லீரலில் இருக்கும் நச்சுக்கள் எளிதில் வெளியேறத் தொடங்கும்.
*தக்காளி பழத்தில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்,போலிக் அமிலம்,பீட்டா கரோட்டின் மற்றும் லுடீன் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அடங்கி இருப்பதால் இவை உடலில் புற்று நோய் செல்கள் உருவாவதை தடுக்கிறது.
*தக்காளி ஜூஸில் அதிகளவு நார்ச்சத்து,பொட்டாசியம்,வைட்டமின் C மற்றும் கோலின் போன்றவை அடங்கி இருப்பதால் இவை இதயம் தொடர்பான பாதிப்பை சரி செய்ய பெரிதும் உதவுகிறது.
*தக்காளி ஜூஸில் அதிகளவு வைட்டமின் K மற்றும் கால்சியம் சத்துக்கள் அடங்கி இருப்பதால் இவை எலும்புகளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
*தக்காளி ஜூஸில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்,புரதங்கள்,நார்ச்சத்து,கார்போஹைட்ரேட், வைட்டமின்கள்,பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.இவற்றை முகத்திற்கு பயன்படுத்தினால் முகம் மிகவும் பொலிவாகவும்,அழகாகவும் இருக்கும்.அதேபோல் முக சுருக்கத்திற்கும் சிறந்த தீர்வாக இவை இருக்கிறது.
*தக்காளி ஜூஸில் அதிகளவு பொட்டாசியம் நிறைந்து இருப்பதால் இவை உடலில் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.இதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறைகிறது.
*தக்காளி ஜூஸ் தினமும் பருகுவதால் உடல் சோர்வு மற்றும் மன சோர்வு பாதிப்பு விரைவில் நீங்கும்.