சானிடைசரைக் குடித்து 9 பேர் உயிரிழந்து போன சம்பவம்!!

0
196

 

 

 

 

நாடு முழுவதும் பொது முடக்கம் நிலவி வரும் சூழலில், விரக்தியில் சானிடைசரைக் குடித்து 9 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரகாசம் மாவட்டத்தில் மதுபான கடைகள் திறக்கவில்லை என்பதால், கடும் விரக்தியில் ஒரே கிராமத்தை சேர்ந்த 9 பேர் சானிடைசர் குடித்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கொரோனா நோய்த் தொற்று காரணமாக பொது முடக்கத்தினை ஒவ்வொரு மாநிலமும் கடைபிடித்து வருகிறது. இதில் மதுபானக் கடைகளும் திறப்பதற்கு வழியில்லை என அவைகளும் மூடப்பட்டுள்ளன.

 

இந்த நிலையில் மதுபானத்திற்கு அடிமையானவர்கள் தங்கள் சொந்த தயாரிப்பாகவே கள்ளச் சாராயங்களை காய்ச்சவும் முற்படுகிறார்கள். அப்படித்தான் இந்த ஒன்பது பேரும் மது கிடைக்காத விரக்தியில் சானிடைசரை குளிர்பானங்களில் கலந்து குடித்துள்ளனர். பின்பு அவர்களுக்கு உடல் மிகவும் மோசமான நிலைமைக்குச் சென்றதால் அவர்கள் உயிரிழந்தனர்.

 

இதனை விசாரித்த காவல்துறையினர், அந்தக் கிராமத்தில் இன்னும் சானிடைசர் குடித்த சிலர் சுகாதார மையத்தில் சிகிச்சையில் உள்ளனர் என்று அப்பகுதி காவல்துறையினர் கூறினர்.

Previous articleவிருப்ப மொழி பட்டியலில் இருந்து இந்த மொழி நீக்கமா.!
Next articleடி.வி வாங்க தாலியையே விற்ற தாய்! இவரின் செயலைப் பாராட்டும் நெட்டிசன்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here