90 நோய்களுக்கு இந்த 2 பொருள் சேர்த்த பானம் ஒன்று தான் தீர்வு!! பாட்டி சொன்ன வைத்தியம்!!

Photo of author

By Divya

90 நோய்களுக்கு இந்த 2 பொருள் சேர்த்த பானம் ஒன்று தான் தீர்வு!! பாட்டி சொன்ன வைத்தியம்!!

இன்றைய உலகில் ஆரோக்கியம் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.நம்முடைய வாழ்க்கை மற்றும் உணவுமுறை பழக்கவழக்கம் அனைத்தும் முற்றிலும் மாறிவிட்டது.இதனால் பல்வேறு நோய் பாதிப்புகளை பெரியவர்கள் முதல் சிரியவர்கள் வரை அனைவரும் சந்தித்து வருகிறோம்.

நம் உடலுக்கு ஆரோக்கியமான உணவு என்பது மிகவும் அவசியம்.உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் மட்டுமே நம்மால் நம் உடலை கொடிய நோய்களில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும்.உலகில் பல வித நோய்கள் உலா வந்து கொண்டிருக்கிறது.அதனை சரி செய்ய இயற்கை வழிகளை கடைபிடிப்பது மிகவும் அவசியம் ஆகும்.

தேவையான பொருட்கள்:-

கொத்தமல்லி விதை – 1 தேக்கரண்டி

*பெருஞ்சீரகம்(சோம்பு) – 1 தேக்கரண்டி

*தேன் – தேவையான அளவு
அல்லது
பனங்கற்கண்டு

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 1 தேக்கரண்டி கொத்தமல்லி விதை மற்றும் 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம்(சோம்பு) சேர்த்து மிதமான தீயில் 1 நிமிடம் வறுத்து அடுப்பை அணைத்துக் கொள்ளவும்.

பின்னர் இதை ஒரு உரலில் போட்டு 1 முறை இடித்துக் கொள்ளவும்.அடுத்து அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விடவும்.

பிறகு வறுத்து இடித்து வைத்துள்ள பெருஞ்சீரகம் + கொத்தமல்லி விதைகளை சேர்த்து 1 1/4 டம்ளர் தண்ணீர் சுண்டி 3/4 டம்ளராக வரும் வரை கொதிக்க விடவும்.பின்னர் அடுப்பை அணைத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு டம்ளர் எடுத்து தயார் செய்து வைத்துள்ள பானத்தை வடிகட்டி கொள்ளவும். தேவைபட்டால் சிறிதளவு துயத் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து கலக்கி பருகவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் வயிறு சம்மந்தமான பாதிப்பு,எலும்பு மற்றும் நரம்பு தொடர்பான பாதிப்பு சரியாகும்.