கடலூர் மக்களுக்கு அடித்த ஜாக்பாட்?

0
237

தமிழகம் முழுவதும் வெங்காயம் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக வெங்காயம் விலை 100 ரூபாய் முதல் 180 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் வியாபாரிகள் வெங்காயம் வாங்க முடியாமல் பெரும் பாதிப்படைந்து வந்தனர்.

கடலூர் பான்பரி மார்க்கெட்டில் உள்ள ஒரு காய்கறி கடையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 1 கிலோ வெங்காயம் ரூ. 25-க்கு விற்கப்பட்டது. 4 கிலோ வெங்காயம் 100 ரூபாய் என எழுதப்பட்டிருந்தது.

இதனைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அந்த கடை உரிமையாளரிடம் மீண்டும் மீண்டும் சென்று இந்த விலை உண்மையா? நாங்களும் 100 ரூபாய் கொடுத்தால் 4 கிலோ வெங்காயம் கிடைக்குமா? என்பதனை அதிர்ச்சியுடனும், ஆச்சரியத்துடனும் கேட்டனர்.


தகவல் கடலூர் நகர் முழுவதும் காட்டுத் தீ போல் பரவியது. பலர் அந்தக் கடையையும் 4 கிலோ வெங்காயம் 100 ரூபாய் என்ற வாசகத்தையும் செல்போனில் படம் பிடித்து அனைவருக்கும் அனுப்பி வைத்ததை பார்க்கமுடிந்தது.

காலை முதல் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முண்டியடித்து வெங்காயத்தை போட்டி போட்டுவாங்கி சென்றனர்.

இது குறித்து கடை உரிமையாளர் கூறும் போது இன்று காலை பெங்களூர் பகுதியிலிருந்து 2 லாரிகளில் 22 டன் வெங்காயம் எங்கள் கடைக்கு வந்தது. பெங்களூரில் இருந்து அனுப்பிய மொத்த வியாபாரி தெரிவித்த தொகையான 4 கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றோம். பலபேர் எங்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதோடு, வாழ்த்தியும் செல்கின்றனர் என்றார்.

Previous articleதமிழர்களின் பாரம்பரியத்தை மறைக்க முயற்சியா? மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
Next articleகட்டுப்பாடு அற்று பாலியல் உறவு செய்த ஆடுகள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here