நாகதோஷம் நீங்க எளிய பரிகாரம்!

0
225

நாகம்மன் கோவிலில் நாகசதுர்த்தி அன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. நாக தோஷம் நீங்க பலரும் இங்கு வந்து வழிபாட்டில் பங்கேற்க்கிறார்கள்.

நாக வழிபாடு என்பது வேத காலத்திலிருந்தே இருந்த ஒரு முக்கியமான வழிபாடாகும். நாகத்தை வழிபடுவதற்கு உகந்த நாள் நாகசதுர்த்தி சதுர்த்தியன்று விரதமிருந்து துள்ளுமாவு படைத்து வேண்டிக் கொண்டால் தோஷங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் நடக்கும் என்பது ஐதீகமாக இருக்கிறது.

கருட பஞ்சமிக்கு முன்னர் அமையும் சதுர்த்தி திதி நாள்தான் நாத சதுர்த்தி எனப்படுகிறது. பொதுவாக ஆடி மாதம் சதுர்த்தி தினத்தில் ஆரம்பமாகும் நாக சதுர்த்தி விரத வழிபாடு அடுத்த வருட ஆனி மாத சதுர்த்தி உடன் முடிவடையும். இடைப்பட்ட மாதங்களில் வரும் ஒவ்வொரு சதுர்த்தி தினமும் நாகசதுர்த்தி தினமாகும் என்று சொல்லப்படுகிறது. அவற்றில் முக்கியமானது சஷ்டி விரதத்துடன் அனுஷ்டிக்கப்படும் ஐப்பசி மாத நாகசதுர்த்தி.

பித்ரு தோஷம் இருப்பவர்களுக்கு கூட பரிகாரம் செய்து சரி செய்து விட முடியும், ஆனால் நாகதோஷம் இருப்பவர்களுக்கு பரிகாரமே இல்லை என்று சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

அதிலும் ஜாதக ரீதியிலான நாகதோஷத்தை விடவும் நாகத்தை தாக்குவதன் மூலமாக உண்டாகும் தோஷம் அபாயகரமானது என்று சொல்லப்படுகிறது. ஏழு ஜென்மங்கள் எடுத்தாலும் நாகம் தொடர்ந்து வரும் என தெரிவிப்பார்கள். இப்படிப்பட்ட தோஷத்திலிருந்து விடுபடுவதற்கு உகந்த வழிபாடு நாக சதுர்த்தி பூஜை மற்றும் விரதம் என தெரிவிக்கப்படுகிறது.

நாக சதுர்த்தியின் போது நாகத்தை பிரதிஷ்டை செய்து புற்றில் மஞ்சள் பொடி வைத்து நாகத்தை வழிபட்டால் தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம்.

Previous articleதிருவள்ளூர் மாவட்டத்தில் இலவசமாக கொடுத்த பொருள் இதுதானா?
Next articleமத்திய அரசு பணிகளில் வேலை பார்க்க விரும்புகிறீர்களா? அப்படியென்றால் உடனே விண்ணப்பியுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here