பல நாட்களாக சென்னை மக்களை பலிவாங்கி கொண்டிருக்கும் மழை!..
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்திலுள்ள கோவை, நீலகிரி,புதுச்சேரி மாவட்டத்தில் இன்று அதிக கன மழைக்கும் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கிண்டி,ஈக்காட்டுதாங்கல்,வேளச்சேரி உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனை தொடர்ந்து சாலையில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக இருப்பதால் அக்குழியில் மழை நீர் தேங்கி நிற்கிறது.இதனால் வாகன ஓட்டுகள் மற்றும் பெரிய கண்டெய்னர் லாரிகளும் சிரமப்படுகிறார்கள்.
இதனை தொடர்ந்து காலை அலுவலகம் செல்வோரும்,பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ,மாணவியரும் மற்றும் வாகன ஓட்டிகளும் சற்று சிரமமடைந்துள்ளனர்.அதேவேலை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை காணப்படுகிறது.ஒரு பக்கம் மகிழ்ச்சியை அளித்தாலும் மறுபக்கம் வேதனை அளிக்க செய்கிறது இந்த மழை.