காமன்வெல்த் போட்டியில் இந்தியா படைத்த மாபெரும் சாதனை!

0
78

இன்றைய தினம் காமன்வெல்த் போட்டிகளின் இறுதி நாளாக அமையும், இதில் இந்தியாவுக்கான பதக்கங்களின் எண்ணிக்கை இதுவரையில் 55 ஆக இருக்கிறது. காமன்வெல்த் வரலாற்றில் இந்தியா அதிக பதக்கங்களை வென்ற போட்டி தொடராக இது அமைந்திருக்கிறது.

இந்தியா இதுவரையில் 18 தங்கம் 15 வெள்ளி 22 வெங்கால பதக்கங்களுடன் 55 பதக்கங்களை வென்றிருக்கிறது0 இறுதி நாளான இன்றைய போட்டிகளுக்கு முன்னதாக இந்தியா பதக்கம் என்ற விளையாட்டுப் போட்டிகள் பட்டியலை இங்கே காணலாம்.

தடகளம் போட்டியில் 1 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம், என மொத்தம் 8 பதக்கங்களை இந்தியா வென்று இருக்கிறது.

குத்துச்சண்டை போட்டியில் 3 தங்கம் 1 வெள்ளி 3 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை இந்தியா கைப்பற்றி இருக்கிறது. அதேபோல கிரிக்கெட்டில் 1 வெள்ளிப் பதக்கத்தை மட்டும் வென்றிருக்கிறது. ஹாக்கி போட்டியில் 1 வெண்கல பதக்கத்தையும், ஜூலோ போட்டியில் 2 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 3 பதக்கத்தையும் வென்று இருக்கிறது.

லான் பால்ஸ் போட்டியில் 1 தங்கம், 1 வெள்ளி என மொத்தம் 2 பதக்கங்களை கைப்பற்றி இருக்கிறது. அதேபோல பளு தூக்குதல் போட்டியில் 1 தங்கத்தை கைப்பற்றி இருக்கிறது இந்தியா.

ஸ்குவாஷ் போட்டியில் 2 வெண்கல பதக்கத்தை கைப்பற்றி இருக்கிறது, மேலும் டேபிள் டென்னிஸ் போட்டியில் 3 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம், என 5 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. பளு தூக்குதல் போட்டியில் 3 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம், என மொத்தம் 10 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

மல்யுத்தம் போட்டியில் 6 தங்கம், 1 வெள்ளி, 5 வெண்கலம், என மொத்தம் 12 தொடக்கங்களை இந்தியா கைப்பற்றியிருக்கிறது. ஒட்டுமொத்தமாக 18 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம், என 55 பதக்கங்களை இந்தியா தன் வசப்படுத்தி இருக்கிறது.

1. ஆஸ்திரேலியா – 65 தங்கம், 54 வெள்ளி, 53 வெண்கலம் – மொத்தம் 172

2. இங்கிலாந்து – 56 தங்கம், 59 வெள்ளி, 52 வெண்கலம் – மொத்தம் 167

3. கனடா – 24 தங்கம், 32 வெள்ளி, 34 வெண்கலம் – மொத்தம் 90

4. நியூசிலாந்து- 19 தங்கம், 12 வெள்ளி, 17 வெண்கலம் – மொத்தம் 48

5. இந்தியா 18 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் ஆக மொத்தம் 55.

6. ஸ்காட்லாந்து 12, 11, 25 மொத்தம் 48

7. நைஜீரியா 12, 9, 14 மொத்தம் 35

8. வேல்ஸ் 8, 6, 13, மொத்தம் 27.

9. தென் ஆப்பிரிக்கா 7, 9, 11, மொத்தம் 27.

10. வடக்கு அயர்லாந்து, 7, 7, 4. – மொத்தம் 18.