பொன்னியின் செகண்ட் சிங்கிள் பாடலுக்கு தயாரா? வெளியான லேட்டஸ்ட் தகவல்

0
258

பொன்னியின் செகண்ட் சிங்கிள் பாடலுக்கு தயாரா? வெளியான லேட்டஸ்ட் தகவல்

பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து ஏற்கனவே ‘பொன்னி நதி பாக்கணுமே’ என்ற பாடல் ரிலீஸாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய நீண்டகால கனவுப் கனவுப் படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. ஏற்கனவே படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. இதையடுத்து கடந்த ஜூலை 30 ஆம் தேதி ‘பொன்னி நதி பாக்கணுமே’ என்ற பாடல் ரிலீஸாகி கவனம் பெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் கார்த்தி , ஜெயம் ரவி மற்றும் ஜெயராம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் ரிலீஸ் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி செகண்ட் சிங்கிள் பாடல் ஐதராபாத்தில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொள்வார்கள் என சொல்லப்படுகிறது. இதற்கான பணிகளை தயாரிப்பு நிறுவனமான லைகா தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Previous articleவெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ ரிலீஸ் எப்போது? வெளியான லேட்டஸ்ட் தகவல்!
Next articleராஜலட்சுமி குரலை நீக்கிவிட்டு அதிதி ஷங்கர்… நட்சத்திர அந்தஸ்துக்காக விருமன் படக்குழு செய்த காரியம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here