ஆபாச படம் காட்டிய ஆசிரியருக்கு செருப்பு மாலை:!! காவல்துறை கைவிட்ட நிலையில் ஊர் மக்கள் செய்த சம்பவம்!!

0
197

ஆபாச படம் காட்டிய ஆசிரியருக்கு செருப்பு மாலை:!! காவல்துறை கைவிட்ட நிலையில் ஊர் மக்கள் செய்த சம்பவம்!!

ஆசிரியர் ஒருவர் குழந்தைகளுக்கு ஆபாச படம் காட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பெற்றோர்கள் மற்றும் ஊர் மக்கள் அந்த ஆசிரியருக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் இழுத்துச் சென்றனர்.

உத்தரகாண்ட் மாநிலம் மேற்கு சிங்பம் மாவட்டம் நவமுண்டி கிராமத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டி அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இதனைக் குறித்து மாணவிகளும் பெற்றோர்களும் அப்பகுதி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். ஆனால் காவல்துறையினர் கண்டுகொள்ளாத நிலையில் கடும் கோபத்திற்கு ஆளான பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அந்த ஆசிரியரை சிறைப்பிடித்து செருப்பு மாலை அணிவித்து,சட்டைகளை கிழித்து, கருமை பூசி ஊர்வலம் இழுத்துச் சென்ற நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையில்,இந்த காமக்கொடூரனுக்கு ஊர் மக்கள் கொடுத்த சரியான தண்டனை என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

Previous articleஇந்த படிப்பிற்கு கால அவகாசம் நீட்டிப்பு!! அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
Next articleஇன்று முதல் அமலுக்கு வரும் 5 மிக முக்கிய நிகழ்வுகள்:!