தமிழகத்தில் மட்டும் 200 கோடி ரூபாய் வசூல்…? சாதனைப் படைக்கும் பொன்னியின் செல்வன்!

0
428

தமிழகத்தில் மட்டும் 200 கோடி ரூபாய் வசூல்…? சாதனைப் படைக்கும் பொன்னியின் செல்வன்!

பொன்னியின் செல்வன் துரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தில் திரையிடப்பட்டு வருகிறது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றவில்லை. கடந்த வாரம் வெளியாகி தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வருகிறது. வெளியான முதல் நாளில் தமிழ்நாட்டில் சுமார் 26.8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் உலகளவில் முதல் நாளில் மட்டும் 80 கோடி ரூபாய் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து வெளியாகி 12 நாட்களில் 400 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக இணைந்துள்ளது பொன்னியின் செல்வன். தமிழகத்தைப் போல மற்ற மாநிலங்களில் இந்த படத்துக்கு பெரியளவில் வரவேற்பு இல்லை என்று சொல்லப்படும் நிலையில் இந்த வசூல் தொகை சற்று ஆச்சர்யமளிப்பதாகவும் உள்ளது.

இந்நிலையில் மொத்த வசூலில் கிட்டத்தட்ட பாதியை தமிழ்நாட்டிலேயே வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை 181 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ள நிலையில் இந்த வாரத்தில் 200 கோடி ரூபாய் வசூலை தாண்டிவிடும் என சொல்லப்படுகிறது.அதனால் தமிழகத்திலேயே அதிகளவு வசூல் செய்த படமாக பொன்னியின் செல்வன் புதிய மைல்கல்லை எட்டும் என சொல்லப்படுகிறது.  தீபாவளி வரை அதிகளவு திரைகளில் பொன்னியின் செல்வன் திரைப்படமே ஓடும் என சொல்லப்படுகிறது.

Previous articleசெல்போன் வாங்கி தருவதாக பணத்தை ஆட்டைய போட்ட ஆசாமி! சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு!
Next articleஇந்தியாவின் ஒற்றுமையை சிதைக்கும் ஹிந்தி திணிப்பு!! தலைமை செயலகத்திலிருந்து பிரதமருக்கு பறந்த அவசர கடிதம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here