ஓபிஎஸ் மகனின் ரவுடிசம்.. இந்த இன மக்கள் கோவிலுக்கு வர தடை! தீப திருநாளால் வெடித்த சர்ச்சை!
தேனி மாவட்ட ஆட்சியருக்கு அம்மாவட்ட வடக்கு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் என்பவர் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் ஓபிஎஸ் மீது சமூக நீதி மறுப்பு நடப்பதாக புகார் கொடுத்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் கைலாசநாதர் கோவில் உள்ளது. அது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றாலும் அது முழுமையாக ஓபிஎஸ் கையாடலில் தான் உள்ளது.
நடந்து முடிந்த தீபத்திருநாள் அன்று ஓபிஎஸ் அவர்களின் குடும்பம் வரும் வரை அர்ச்சகர் விளக்கு ஏற்றாமல், அவர்கள் கொண்டுவரும் விளக்கை தான் ஏற்ற வேண்டும் என்று திட்டவட்டமாக 15 நிமிடத்திற்கு மேலாக காத்துக் கொண்டிருந்தார்.
அருகில் இருந்த சட்டமன்ற உறுப்பினர் நீங்களே விளக்கை ஏற்றுங்கள் என்று கூறியும் சிறிதளவு கூட அதனை அர்ச்சகர் ஏற்காத பட்சத்தில் அந்த இடத்தில் சமூகநீதி மறுப்பு ஏற்படுகிறது.
அதுமட்டுமின்றி ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் அந்த கோவிலுக்கு வரக்கூடாது என்று இருந்த நிலையில், இந்த ஆண்டு அவர்களையும் மதித்து கோயிலுக்குள் செல்ல அனுமதி அளித்துள்ளோம்.
அதுமட்டுமின்றி ஓபிஎஸ் அவர்களின் மகன் ரவுடிசம் செய்வது போல நாங்களும் செய்தால்தான் எங்களுக்கான மரியாதை நடக்கும். ஏனென்றால் சட்டமன்ற உறுப்பினர் அருகில் இருக்கும் பொழுதே அவருக்கு பரிவட்டம் கட்டாமல் ஓபிஎஸ் அவரது மகனுக்கு தான் பரிவட்டம் கட்டப்பட்டது.
இது எந்த விதத்தில் நியாயமாகும்? திராவிட ஆட்சி நடக்கும் இந்த சமயத்தில் இவ்வாறு சாதிய பிரச்சனை நடப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.அதுமட்டுமின்றி சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் இவர்களுக்கு இணையான சாதி சமூகத்தில் இருந்திருந்தால் கட்டாயம் விளக்கு ஏற்ற அனுமதி தந்திருப்பார்கள்.
அத்தோடு சாதி வேறுபாடு பார்ப்பதால் தான் தொட்டிய நாயக்கர் இன மக்களையும் கோவிலுக்குள் விடாமல் அவர்கள் ஆட்சி இருக்கும் வரை கட்டுப்பாடு போட்டு தடுத்து நிறுத்தினர்.அந்த கோவில் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இல்லாமல் ஓபிஎஸ் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
எனவே இவ்வாறு சாதி வேறுபாடு காட்டும் ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சியரிடம் கூறியதோடு இந்த கோவிலில் தற்பொழுது பணிபுரிந்து வரும் குருக்கள் அனைவரையும் வேறொரு கோயிலுக்கு மாற்றும் படியும் கோரிக்கை வைத்துள்ளார்.இவரது மனுவை பெற்ற ஆட்சியர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.