சாகுந்தலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா! கண்ணீர் விட்டு கதறிய சமந்தா என்ன நடந்தது?

0
353
Sagunthalam movie trailer launch party! What happened to the tearful Samantha?
Sagunthalam movie trailer launch party! What happened to the tearful Samantha?

சாகுந்தலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா! கண்ணீர் விட்டு கதறிய சமந்தா என்ன நடந்தது?

நேற்று ஹைதராபாத்தில் சமந்தா நடிப்பில் உருவானா சாகுந்தலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.அந்த விழாவில் நீண்ட நாட்களுக்கு பிறகுதான் சமந்தா கலந்து கொண்டார்.அதனால் அவருக்கு அதிகளவு வரவேற்பு அளிக்கப்பட்டது.மேலும் அந்த விழாவில் இயக்குனர் குணசேகரன் கூறுகையில் இந்த படத்தின் உண்மையான ஹீரோ என்றால் அவர் சமந்தாதான்.

அப்போது அவருடைய பேச்சை கேட்ட சமந்தா உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தினார்.மேலும் சாகுந்தலம் கதாபாத்திரத்திற்கு பலரை நடிக்க வைக்க முயற்சி செய்தனர் ஆனால் தயாரிப்பாளர் நீலிமா சமந்தாதான் நடிக்க வேண்டும் என கூறியதை அனைவருக்கும் தெரிவித்தார்.அதனை தொடர்ந்து சமந்தா பேசும் பொழுது தனக்கு எந்த அளவிற்கு கஷ்டங்கள் இருந்தாலும் சினிமா மீதான காதலை இழக்கமாட்டேன் என கூறினார்.

சாகுந்தலம் திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ் ,தெலுங்கு,மலையாளம் ,கன்னடம் ஹிந்தி என ஐந்து மொழியில் ரிலீஸ் ஆக உள்ளது.மேலும் இந்த படம் காளிதாசர் எழுதிய புராணகதையான சாகுந்தலம் என்ற கதையை அடிப்படையாக உள்ளது.சாகுந்தளையாக நடிகை சமந்தாவும்,துஷ்யந்த் கதாப்பாத்திரத்தில் தேவ் மோகனும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleதியேட்டரில் டாஸ் போட்ட ரசிகர்கள்! தலை விழுந்ததால் உற்சாகம் வைரலாகும் வீடியோ!
Next articleமூக்கு கண்ணாடி வாங்குகிற செலவாச்சும் கம்மியாகட்டும்.. பெற்றோருக்காக உயிரை மாய்த்துக்கொண்ட சிறுமி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here