ரயில்வே நிர்வாகத்தின் மாஸ் அறிவிப்பு!! இவர்களுக்கு மட்டும் 50% கட்டணம் தள்ளுபடி!!
ரயில்வே போக்குவரத்து நிர்வாகமானது மக்களுக்கு ஏற்ப அவ்வபோது பல சலுகைகளை அளித்து வருகிறது. மேற்கொண்டு பயணிகள் பயணம் செய்யும் வகையில் அவர்களுக்கு உண்டான அனைத்து உதவிகளையும் ஒன்றன்பின் ஒன்றாக செய்து வருகிறது.
தற்பொழுது கூட ரயில் நிலையத்தில் காத்திருக்கும் தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு பால் ஊட்டுவதற்கு ஏதுவாக பல உதவிகள் நடைமுறைப்படுத்தி வருகிறது.
அதுமட்டுமின்றி டிக்கெட் பரிசோதகர் ஆடையில் கேமரா பொருத்தம் புதிய திட்டத்தையும் கூடிய விரைவில் அனைத்து ரயில் அமைப்புகளிலும் அமலுக்கு வந்துவிடும்.
இதன் மூலம் டிக்கெட் பரிசோதகர் பயணிகளிடம் எவ்வாறு நடந்து கொள்கின்றார் என்பதை கண்காணித்துக் கொள்ள முடியும்.
அதேபோல மற்ற போக்குவரத்து கழகங்களை விட ரயில்வே போக்குவரத்தில் கட்டணமும் குறைவுதான். அந்த வகையில் 60 வயதிற்கும் மேல் உள்ளவர்கள் பயணிக்கும் பட்சத்தில் 45 சதவீதமானது அவர்கள் கட்டணத்தில் இருந்து தள்ளுபடி செய்யப்படும்.
அதேபோல 58 வயதிற்கு மேல் பயணம் செய்யும் பெண்மணிகளுக்கு 50 சதவீத கட்டணமானது தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த கட்டண தள்ளுபடி ஆனது அனைத்து ரயில்களிலும் அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.