மலசிக்கல்? 1 மணி நேரத்தில் சரியாக்கும் வீட்டு முறை டானிக்!! உடனே செய்து பாருங்கள்!!

Photo of author

By Divya

மலசிக்கல்? 1 மணி நேரத்தில் சரியாக்கும் வீட்டு முறை டானிக்!! உடனே செய்து பாருங்கள்!!

நம்மில் பெரும்பாலானோர் சந்தித்து வரும் பாதிப்புகளில் ஒன்று மலசிக்கல் பாதிப்பு. காலையில் எழுந்ததும் மலத்தை முறையாக வெளியற்றி விட வேண்டும்.இல்லையென்றால் அவை மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது.

மலம் வரும் உணர்வு ஏற்பட்டால் அவற்றை அடக்கி வைக்காமல் உடனடியாக வெளியேற்றி விடுவது அவசியம்.ஒருவேளை அவற்றை அடக்கி வைக்கும் பட்சத்தில் பின்னர் கழிக்கும் பொழுது நமக்கு மிகுந்த வலி ஏற்பட்டு அவை மிகவும் உலர்ந்து வெளியேறும்.இதை உடனடியாக சரி செய்வது மிகவும் அவசியம் ஆகும்.தவறும் பட்சத்தில் மலச்சிக்கல் பாதிப்பு மூல நோயாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*வெதுவெதுப்பான நீர் – 1 டம்ளர்

*ஆலிவ் ஆயில் – 1 தேக்கரண்டி

*விளக்கெண்ணெய் – 1 தேக்கரண்டி

*எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் 2 அல்லது 3 நிமிடம் சூடுபடுத்தவும்.பின்னர் அடுப்பை அணைக்கவும்.

அடுத்து இதை ஒரு டம்ளரில் ஊற்றி 1 தேக்கரண்டி ஆலிவ் ஆயில்,1 தேக்கரண்டி விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து விடவும்.

பின்னர் 1 தேக்கரண்டி அளவு எலுமிச்சை சாறு எடுத்து அதில் கலந்து பருகவும்.இந்த பானத்தை பருகிய அடுத்த 1 மணி நேரத்தில் உடலில் இருந்து மலம் வெளியேறத் தொடங்கும்.இந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.

வயிற்றில் உள்ள கழிவுகள் முழுமையாக வெளியேறியப் பின்னர் குளிரிச்சி நிறைந்த இளநீர்,தயிர் உள்ளிட்டவற்றை உணவாக எடுத்துக் கொள்ளவும்.

மற்றொரு ரெமிடி:-

தேவையான பொருட்கள்:-

*பெருஞ்சீரம்(சோம்பு) – 1 தேக்கரண்டி

*எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி

*விளக்கெண்ணெய் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து 1 தேக்கரண்டி சோம்பு சேர்த்து மிதமான தீயில் 1 நிமிடம் வறுக்கவும்.

பின்னர் 1 டம்ளர் தண்ணீர்’ஊற்றி 1 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும்.இதில் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் 1 தேக்கரண்டி விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து பருகவும்.

இந்த பானத்தை குடித்த அடுத்த 2 மணி நேரத்திற்குள் உடலில் உள்ள மலக் கழிவுகள் மற்றும் வாயு தொல்லை முழுமையாக நீங்கி விடும்.