தீராத அல்சர் நோயை ஒரே நாளில் சரி செய்யும் பாட்டி வைத்தியம்!!
தற்போதைய வாழ்க்கை சூழலில் நோய் பாதிப்பு என்பது எளிதில் நம்மை அண்டிவிடுகிறது. அதில் ஒன்று தான் அல்சர்.இந்த பாதிப்பு முறையற்ற உணவு முறை,அதிக காரம் கொண்ட உணவு உள்ளிட்டவைகளால் ஏற்படுகிறது.இதனை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்துவது மிகவும் முக்கியம் ஆகும்.
தேவையான பொருட்கள்:-
*மோர் – 1 கிளாஸ்
*வெந்தயம் – 1 தேக்கரண்டி
*ஆளி விதை – 1 தேக்கரண்டி
*கடுக்காய் பொடி – 1 தேக்கரண்டி
*தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி
செய்முறை:-
முதலில் ஒரு உரல் எடுத்து அதில் 1 தேக்கரண்டி வெந்தயம் மற்றும் 1 தேக்கரண்டி ஆளி விதை சேர்த்து நன்கு இடித்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பவுலில் இந்த இடித்த பொடிகளை சேர்த்துக் கொள்ளவும்.அடுத்து 1 தேக்கரண்டி அளவு கடுக்காய் பொடி எடுத்து அதில் சேர்த்துக் கொள்ளவும்.
கடுக்காய் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய ஒன்று.அதை வாங்கி அரைத்து பொடி செய்தும் பயன்படுத்தலாம்.இல்லையென்றால் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய கடுக்காய் பொடிகளையும் வாங்கி பயன்படுத்தலாம்.
அடுத்து அதில் 1 கிளாஸ் மோர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.இந்த மோரை காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும்.அதற்கு முன் 1 ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய் எடுத்து குடிக்க வேண்டும்.பின்னர் தயார் செய்து வைத்துள்ள மோர் கலவையை பருக வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் பாடாய் படுத்தி வந்த அல்சர் பாதிப்பு விரைவில் சரியாகிவிடும்.
அல்சர் பாதிப்பு குணமாக மற்றொரு ரெமிடி:-
தேவையான பொருட்கள்:-
*மோர் – 1 டம்ளர்
*சீரகம் – 1 தேக்கரண்டி
*இந்துப்பு – 1 சிட்டிகை அளவு
செய்முறை:-
அடுப்பில் கடாய் வைத்து 1 தேக்கரண்டி சீரகம் சேர்த்து மிதமான தீயில் 1 அல்லது 2 நிமிடம் வறுத்துக் கொள்ளவும்.பின்னர் அடுப்பை அனைத்து விடவும்.
அடுத்து ஒரு உரல் அல்லது மிக்ஸி ஜாரில் வறுத்து வைத்துள்ள சீரகத்தை சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ளவும்.
பிறகு ஓரு டம்ளரில் மோர் ஊற்றி அதில் வறுத்து பொடி செய்து வைத்துள்ள சீரகத்தை சேர்த்து கலந்து கொள்ளவும்.பின்னர் சுவைக்காக 1 சிட்டிகை அளவு இந்துப்பு அல்லது கல் உப்பு கலந்து பருகவும்.இவ்வாறு தொடர்ந்து எடுத்து வந்தோம் என்றால் அல்சர்,வயிற்றுப் புண் உள்ளிட்ட பாதிப்பு சரியாகும்.